பொன்னடிக்கால் ஜீயர்

மணவாள மாமுனிகளின் முதன்மை சீடர்களுள் ஒருவரான பொன்னடிக்கால் சீயர் நாங்குநேரியிலுள்ள வானமாமலை எனும் சிற்றூரில் புரட்டாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அரங்காச்சாரியார் எனும் பண்டிதருக்கு இரண்டாம் மகவாய் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அழகியவரதர் என்பதாகும்.

பொன்னடிக்கால் ஜீயர்
பிறப்புஅழகிய வரதர்
வானமாமலை, நாங்குநேரி

பிறபெயர்கள்

  • வானமாமலை சீயர்
  • வானாத்ரி யோகி
  • இராமானுச சீயர்
  • இராமானுச முனி
  • வானமாமலை இராமானுச சீயர் (வானமாமலை மூலவரான தெய்வநாயக பெருமாள் அழைத்தருளியது)
  • பொன்னடிக்கால் சீயர் ( மணவாள மாமுனிகள் அருளியது )

சீடர்கள்

  • தொட்டாச்சாரியர் எனப்படும் சோழசிம்மபுரம் மஹார்யர்
  • சமரபுங்கவாச்சாரியர்
  • சுத்த சத்வம் அண்ணா
  • ஞானக்கண்ணாதன்
  • இராமானுசம் பிள்ளை
  • பள்ளக்காய் சித்தர்
  • கோஷ்டி புரத்தாயர்
  • அப்பாச்சிரியரண்ணா

இலக்கியபணி

திருப்பாவை சுவபதேச வியாக்யானம் எனப்படும் திருப்பாவை விளக்கவுரை

சிறப்பு

  • மணவாளமாமுனிகளின் முதல் மாணவர். மாமுனிகள் சந்நியாசம் ஏற்கும் முன்னரே பொன்னடிக்கால் சீயர் மாமுனிகளை தன் ஆச்சாரியனாக வரித்துக்கொண்டார்.
  • மணவாளமாமுனிகள் ஆணைப்படி வானமாமலை மடத்தை உருவாக்கி அதன் முதல் மடாதிபதியாய் கோயில்நிர்வாகம் செய்தவர்.
  • அப்பிள்ளை மற்றும் அப்புள்ளார் ஆகியோரை ஆட்கொண்டு மணவாளமாமுனிகளுக்கு சீடர்களாக்கியது
  • மணவாளமாமுனிகள் தனக்கு அமைத்துக் கொண்ட அஷ்டதிக் கஜங்கள் போன்றே பொன்னடிக்கால் சீயருக்கும் தனியே அஷ்டதிக் கஜங்கள் அமைத்துக் கொடுத்து வைணவத்தை போதிக்க பணித்தருளினார்.

தனியன்

ஆச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன் இதோ:

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.