பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி

பிரதிவாதி பயங்கரம் அண்ணன் (Prathivadhi Bhayankaram Annan) வைணவ சமய குருவும், தமிழ் மற்றும் சமசுகிருத மொழி அறிஞரும் ஆவார். இவர் சமசுகிருத மொழியில் இயற்றிய வெங்கடேச சுப்ரபாதம் இசைச் செய்யுள், திருப்பள்ளியெழுச்சியின் போது திருமலை உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்றளவும் பாடப்படுகிறது.[1][2][3]

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி
பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரி
பிறப்புகாஞ்சிபுரம்
இயற்பெயர்ஹஸ்திகிரிநாதர்
தலைப்புகள்/விருதுகள்பிரதிவாதி பயங்கரர்
Sect associatedவைணவம்
குருமணவாள மாமுனிகள்
தத்துவம்விசிட்டாத்துவைதம்
குறிப்பிடத்தக்க சீடர்(கள்)அண்ணப்பா, அனந்தாச்சாரியார், அழகிய மணவாள பெருமாள் நயானார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணன், கி பி 1361இல் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஹஸ்திகிரிநாதர் ஆகும். மணவாளமாமுனிகளின் நேரடிச் சீடராக இருந்தவர்.

வைண சமயத்தை வளர்ப்பதற்காக இராமானுசர் நியமித்த 74 சிம்மாசனாதிகளில் ஒருவரான முடும்பை நம்பியின் வழித்தோன்றலில் பிறந்தவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.[4] பின்னர் வேதாத தேசிகரின் மகன் நயன வரதாச்சாரியின் சீடராக மாறியவர். இவர் புகழ் பெற்ற வைணவ ஆன்மிகச் சொற்பொழிவாளரும், எழுத்தாளுரும், புலவரும், விளக்க உரையாசிரியரும் ஆவார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.