கிருஷ்ண ஜென்மபூமி

கிருஷ்ண ஜென்மபூமி (Shri Krishna Janmbhoomi), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா நகரத்தில், யமுனை ஆற்றாங்கரையில் அமைந்துள்ள வைணவ சமயத் திருத்தலமாகும். [1][2]. முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

மசூதியின் பின்னனியில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில்
கிருஷ்ன ஜென்ம பூமியில் உள்ள கிருஷ்ணர் கோயில்


மதுராவை ஆண்ட கம்சனின் அரண்மனை சிறைச்சாலையில், வசுதேவர்தேவகி தம்பதியர்க்கு, ஆவணி மாதம், தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்தில் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்ததாக பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

யது குல கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி எனும் பெயரில் இந்து சமய மக்களால் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த சிறையின் அறை, கிருஷ்ணர் கோயிலின் கர்ப்பகிரகமாக அமைந்துள்ளது. [3][4]

கம்சனிடமிருந்து கிருஷ்ணரை காப்பதற்காக, கிருஷ்ணர் பிறந்த இரவில், வசுதேவர் யமுனைக்கு அப்பால் உள்ள பிருந்தாவனத்தில் வாழ்ந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் - யசோதை தம்பதியரிடம் கிருஷ்ணரை ஒப்படைத்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.