கோவிந்தன்

கோவிந்தன் அல்லது கோபாலன் (Sanskrit/Hindi: गोविंद, गोपाल) என்பது விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றாகும். இப்பெயர்களுக்கு, வேதத்தைக் காண்பவர் என்றும் வேதத்தைக் காப்பவன் என்றும் பொருள். கோவிந்தன் அல்லது கோபாலன் எனும் பெயரில் உள்ள கோ என்பதற்கு ஆநிரைகள் என்றும், அதனை காப்பவன் என்றும் பொருள்படும். பொதுவாக இப்பெயர்கள் ஆநிரைகளை மேய்த்த கிருட்டிணனைக் குறிக்கும்.

கோவிந்தனின் புகழ் பெற்ற சிலை, ஜெய்ப்பூர்

விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில், கோவிந்தன் அல்லது கோபாலன் எனும் பெயர்கள் 187 மற்றும் 539-வது வரிசையில் காணப்படுகிறது. [1]

தோத்திரங்கள்

கோவிந்தனைத் தொழுபவர்கள் பிறப்பு, இறப்பு எனும் பிறவிச்சுழற்சியிலிருந்து விடுபடுகிறார்கள் என பஜ கோவிந்தம் எனும் நூலில் ஆதிசங்கரர் கூறுகிறார்.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Sri Vishnu Sahasranama, commentary by Sri Sankaracharya, pgs. 69 and 115, translated by Swami Tapasyananda (Ramakrishna Math Publications, Chennai)

மேற்கோள்கள்

  • Hein, Norvin (May 1986). "A Revolution in Kṛṣṇaism: The Cult of Gopāla". History of Religions 25 (4): 296–317. doi:10.1086/463051.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.