ராதை

ராதை (தேவநாகரி: राधा, ராதா), ராதிகா, ராதாராணி மற்றும் ராதிகாராணி என்றும் அழைக்கப்பட்டவர், பகவத புராணத்திலும், இந்து மதத்தின் வைஷ்ணவ பரம்பரையின் கீத கோவிந்தத்திலும் கிருஷ்ணரின் முதன்மையான பக்தை ஆவார்.[1] ராதா எப்போதும் கிருஷ்ணரின் பக்கத்தில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவதுடன், இன்றைய கௌடிய வைஷ்ணவ மத சாஸ்திரத்தில் முதன்மைபடுத்தி சிறப்பிக்கப்படும், புராதனமான பெண் தெய்வம் அல்லது சக்தியாகக் கருதப்படுகிறார். பிரம்ம வைவர்த புராணம், கார்கா சம்ஹித்தா மற்றும் பிரைஹாட் கௌதமிய தந்திரம் போன்ற நூல்களைப் போல, இந்த நூலிலும் கிருஷ்ணர் உடனான ராதாவின் உறவுமுறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில் ராதா வணங்குவதற்கு உரிய முதன்மையான காட்சிப் பொருளாவார், நிம்பர்காவைப் போல, ராதா மற்றும் கிருஷ்ணர் இருவரும் ஒன்று சேர்ந்து இருந்தது முற்றிலும் உண்மையாகக் கருதப்படுவதாக, இந்தப் பரம்பரையை நிறுவியவர் அறிவித்தார்.[2]

ராதை
Radha
ராசத்தானிய வகை இராதையின் ஓவியம்
தேவநாகரிराधा
பாளி IASTராதிகா
இடம்பிருந்தாவனம்
ஆயுதம்எதுவுமில்லை
துணைகிருட்டிணன்

பேச்சின் போது ராதாராணி அல்லது ராதிகா என்று ராதா அடிக்கடி அழைக்கப்படுவதுடன், அவர் பெயருக்கு முன்னால் மதிப்பளிக்கும் வார்த்தையான “ஸ்ரீமதி” என்று கடவுளைப் பின்பற்றுபவர்களால் குறிப்பிடப்படுகிறார். ராதா பெண் தெய்வம் லட்சுமியின் மிக முக்கிய அவதாரங்களில் ஒருவர் ஆவார்.[3][4][5]

கோபியர் ராதா

ராதையை கிருஷ்ணருக்கு அறிமுகப்படுத்தல்: ராஜா ரவிவர்மாவின் ஓவியம்

மகாபாரதம் மற்றும் பாகவத புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் போன்றவற்றில் சொல்லப்பட்ட கதையில், கிருஷ்ணர், பிருந்தாவனம் கிராமத்தில் கோபியர்கள் என்று அழைக்கப்பட்ட இடையர் இன இளம் பெண்களின் தோழமையில், தன் அதிகப்படியான இளமைப் பருவத்தைச் செலவழித்தார். மகாபாரதம் பிருந்தாவனத்தில் கிருஷ்ணரின் முந்தைய வாழ்க்கையை சற்று விரிவாக விவரிக்கவில்லை, மாறாக அதற்குப் பிறகான குருச்சேத்திரப் போரில் அதிக கவனம் செலுத்தியது, ஆனால் பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் கடந்த காலக் குழந்தைப் பருவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. பாகவத புராணத்தில், ராதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்த நூலின் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் தான் இளைஞராக வளர்ந்து வரும் சமயத்தில், கோபியர்களுள் ஒருவருடன் விளையாடியதாக மறைமுகமாக அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகவத புராணத்தின் கூற்றின்படி, கிருஷ்ணர் தனது 10 வது வயது, 7வது மாதத்தில், பிருந்தாவனத்தை விட்டு வெளியேறி மதுராவிற்குச் சென்றார்.[6] கிருஷ்ணன் பிருந்தாவனை விட்டு வெளியேறிய சமயத்தில், ராதாவும் பத்து வயதுடையவராகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் பின்னர் வெளிவந்த கீத கோவிந்தம் என்ற நூலில் ராதாவைப் பற்றி சற்று விளக்கமாகத் தரப்பட்டுள்ள விவரங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

வைஷ்ணவத்தில்

கிருஷ்ணருடன் ராதா இருப்பதைப் போன்ற ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள்
ராதையுடன் சதுரங்கம் விளையாடும் கிருட்டிணன்

வைஷ்ணவ சமயம் அல்லது இந்து மத பக்திப் பாரம்பரியத்தில் கிருஷ்ணர் மையப்படுத்தப்படுகிறார், ராதா, கிருஷ்ணனின் பெண் நண்பர் மற்றும் ஆலோசகர் ஆவார். இந்தப் பாரம்பரியங்களின் சில ஆதரவாளர்களுக்காக, கிருஷ்ணரைப் போன்றோ அல்லது அவரை விட அதிகமாகவோ ராதா முக்கியத்துவம் பெறுகிறார். கிருஷ்ணரின் புராதன சக்தியாக ராதா இருக்கலாம் என்று கருதப்படுவதுடன், நிம்பர்கர் சம்பிரதாயம் மற்றும் அதைப் பின் தொடர்ந்து வரும் கௌடிய வைஷ்ணவப் பாரம்பரியத்தின் அங்கமான சைதன்ய மஹாபிரபு ஆகிய இரண்டிலும் ராதா மிகப் பெரிய பெண் தெய்வமாகக் கருதப்படுகிறார். மற்ற கோபியர்கள் அனைவரும் வழக்கமாக ராதாவின் பணிப் பெண்களாகக் கருதப்படுகின்றனர். அதோடு ராதா, கிருஷ்ணரின் விருப்பத்தில் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணருடனான அவர் உறவு முறையின் இரண்டு வகைகள்: ஸ்வாக்ய-ரஸா (திருமணமான உறவுமுறை) மற்றும் பராகியா-ரஸா (முடிவற்ற மனப்பூர்வமான “அன்பைக்” குறிப்பிடும் உறவுமுறை).

நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில், கிருஷ்ணருடனான ராதாவின் உறவுமுறை ஸ்வாக்கிய-ரஸா என்று சிறப்பிக்கப்படுவதுடன், பிரம்ம வைவர்த பூரணம் மற்றும் கர்கா சம்ஹித்தா போன்ற நூல்கள் அடிப்படையில் ராதா மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் திருமணத்தை விவரிக்கிறது. கௌடிய பாரம்பரியம் காதலின் உயர்ந்த நிலையை பராகியா-ரஸா வில் மையப்படுத்துகிறது, அத்துடன் ராதாவும், கிருஷ்ணனும் பிரிந்திருந்தாலும் நினைவுகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். இவ்வுலகைச் சார்ந்த பாலுணர்வைப் போலன்றி, அடிப்படையில் உயர்ந்த, கடவுளைப் பற்றிய இயல்பான காதலைப் போல, கிருஷ்ணனை எண்ணிய கோபியர்களின் காதல் மறைபொருளின் மூலம் விவரிக்கப்படுகிறது.

இயற்கையில் கிருஷ்ணருடனான ராதாவின் உறவுமுறை பற்றிய உயர்ந்த இரகசியத்தை ஏன் மற்ற புராண நூல்களில் ராதாவைப் பற்றிய கதையில் விரிவாகக் குறிப்பிடவில்லை என்று கௌடிய மற்றும் நிம்பர்க வைஷ்ணவப் பள்ளிகளின் சார்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.[7]

பிறப்பு

கடவுள் கிருஷ்ணரின் காதலியான ராதா ஒரு கூர்ஜரியாவார் (இடையர் குலப்பெண்)[8], அத்துடன் இந்தியாவின் இன்றைய புது டெல்லிக்கு அருகாமையிலுள்ள பிருந்தாவனத்தில் இருந்து 8 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பார்சனா அல்லது ராவல் ஆகிய இரண்டு கிரமங்களில் ஒன்றில் பிறந்தார்.[9] அவர் பாரம்பரியத்தில் பல்வேறு விவரணைகள் உள்ளன. விர்சபானு என்பவர் இடையர்களின் தலைவராக இருந்தார் என்பதுடன், ராதாவின் தந்தையும் ஆவார். விர்சபானு கடவுள் நாராயணனின் அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அதே சமயம் அவர் தாய் கலாவதி பெண் தெய்வம் லட்சுமியின் அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.

கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் பிருந்தாவனில் ராதாவின் இறைவழிபாடு சிறப்புமிக்கது. அங்கு அவரின் முக்கியத்துவம் கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை விஞ்சக்கூடியதாக இருக்கிறது. கௌடிய வைஷ்ணவத்தில் கிருஷ்ணரிடத்தில் ராதாவின் அன்பு மிகவும் உயர்ந்ததாக முதன்மைபடுத்தப்படுகிறது, ஏனெனில் அது முடிவற்றதுடன், நிபந்தனையற்ற தன்மையைக் கொண்டது. ஆகவே ராதா, கிருஷ்ணருக்கு ‘அவரின் இதயம் மற்றும் ஆன்மா’, மற்றும் அவரின் ‘ஹிலாந்தி-சக்தி’ (மன வலிமைத் தோழமை) ஆகிய அளவுகளில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார்.

பிரிஹட்-கௌதமிய தந்திரத்தில், ராதாராணி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறார்: “இயற்கைக்கு அப்பாற்பட்ட பெண் தெய்வம் ஸ்ரீமதி ராதாராணி, கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான சரிநேர் படிவமாவார். அவர் எல்லா நற்பேறுடைய பெண்தெய்வத்தின் மையத் தோற்றம் ஆவார். அவர் கடவுள் தன்மையுடைய அனைத்து-கவர்ச்சிமிக்க ஆளுமையை ஈர்ப்பதற்கான முழுமையான வசீகரத்தை சொந்தமாய்க் கொண்டுள்ளார். அவர் புராதனமான கடவுளின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.”

நிம்பர்க்கர்

நிம்பர்க்கர் என்பவர் ராதாவைப் பற்றிய கொள்கைகளை எங்கும் பரவச் செய்த முதல் வைஷ்ணவ ஆச்சார்யர் ஆவார்.[10][11]

சைதன்ய மகாபிரபு

ராதா மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவரின் அவதாரங்கள் ஒரே வடிவத்திலானவை (நவீன கால இஸ்கான் இயக்கம்) என, வங்காளத் துறவியான சைதன்ய மஹாபிரபு (1486 - 1534) முற்றிலும் நம்புகிறார். சைதன்யர் தன் வாழ்க்கை முழுவதும், வைஷ்ணவப் பாரம்பரியத்தின் பக்தராகவே வாழ்ந்தார், மேலும் அவர் எந்த அவதாரத்தின் வடிவத்தையும் வெளிப்படையாகக் கோரவில்லை, ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் தனக்கு நெருங்கிய சம்பந்தமுள்ள தெய்வீக வடிவத்தை அவர் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[12]

திருவிழாக்கள்

ராதாவின் பிறந்த நாள் ராதாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அனுமதிக்கப்படாத பக்தர்கள் இந்தச் சமயத்தில் சிறப்பான முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்காக, அவரின் பொருட்டு குற்றங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதன் காரணமாக, ராதாவின் பெயர் பொதுவாகப் பாடப்படுவதில்லை. அவர் குண்டம், அல்லது ஏரி ஆகியவற்றினுள் அனைத்து பக்தர்களும் நுழைவதற்குத் தகுதி பெறுவது, ஹோலியாகக் கருதப்படுகிறது.

ராதா குண்டம் (ராதாராணியின் ஏரி) தோற்றத் திருவிழா நாளில், அங்கே குளிப்பதற்குப் பக்தர்கள் நடு இரவு வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரின் “தோன்றும் நாள்” அல்லது ”பிறந்த நாள்” இல் அவரின் ஹோலிப் பெயர்கள் அங்கே பாராயணம் செய்யப்படுகிறது. அவர் “தோன்றுவதாகச்” சொல்லப்படுகிறது, ஏனெனில் அவர் பிறப்பு அல்லது இறப்பு எதையும் கொண்டிருப்பதில்லை, அத்துடன் தளைகளை நீக்குவதற்குக் கிருஷ்ணருடன் நிரந்தரமாகச் சேர்ந்திருக்கிறார். அவர் கிருஷ்ணரை "திருமணம்" செய்து கொள்வதற்கு ஏற்ற மிகவும் தூய்மையானப் பெண் ஆவார்.

பெயர்கள் & இறைவழிபாடு

வார்சனாவில் உள்ள கோயில் ராதா மற்றும் கிருஷ்ணரின் இறை வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ராதா கொண்டுள்ள பல சிறப்புப் பெயர்கள் அவரது பண்புகள் மற்றும் சிறப்பியல்புகளை விவரிக்கிறது.

  • ராதிகா – இது மிகவும் பொதுவான சிறப்புப் பெயர் என்பதுடன், கிருஷ்ணரைப் பற்றிய அவரின் இறைவழிபாடு ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர் தனது அதிகாரத்தை மையப்படுத்துவதுடன், மனதைத் தெளிவாக்குவதை உள்ளடக்கியுள்ளார். பெண் தெய்வம் லட்சுமியின் அவதாரமாவார். அழகு, அறிவு, மற்றும் சிறந்த நற்பெயரைக் கொண்டவர்.
  • காந்தாவரி – கைதேர்ந்த பாடகர்[13]
  • கோவிந்த-நந்தினி – இவர் கோவிந்த (கிருஷ்ண) னிற்கு மன நிறைவைத் தருகிறார்.
  • கோவிந்த-மோஹினி – இவர் கோவிந்தனைக் கலக்கமடையச் செய்கிறார்.
  • கோவிந்த-சர்வாசவா – இவர் கோவிந்தனிற்கு மிகவும் முக்கியமானவரும், அல்லது அனைத்துமாவார்.
  • சர்வ-காந்த ஷிரோமனி – கிருஷ்ணரின் அனைத்து மனைவிகளின் மகுட அணிகலனாகும்.
  • கிருஷ்ணமயி – இவர் கிருஷ்ணனை உள்ளும், புறமுமாகப் பார்ப்பவர்.
  • மதன்-மோகன்-மோகினி – கௌடிய பாரம்பரியத்தில் கிருஷ்ணர் (மிக முக்கியமான ஒருவராக) ஈர்ப்புக் கடவுளான காமதேவன் (மதன்) உள்ளிட்ட வாழும் அனைவரையும் வசீகரிப்பவராக நம்பப்படுகிறது. ஆகவே கிருஷ்ணனே ஆயினும் வசீகரிக்கும் நிலையிலான தனித்தன்மையைக் கொண்டுள்ளார் ராதா, ஆகவே அவர் மதன்-மோகன்-மோகினி: மன்மதனை வசீகரிப்பவரை வசீகரிப்பவர், என்றழைக்கப்படுகிறார் .
  • ஆராதனா – ராதாராணி பெயரின் ஆதாரமாவார் அத்துடன், கிருஷ்ணனை வழிபடுவதில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறது.
  • சர்வ-லட்சுமி – அனைத்து நற்பேறுள்ள பெண் தெய்வங்களின் புராதனமான மூலாதாரமாகும்.
  • விர்ஷபானு-நந்தினி – விர்சபானுவின் மகள்
  • பிருந்தாவனேஷ்வரி – பிருந்தாவனத்தின் அரசி
  • லலிதா-சக்தி – கோபி லலிதாவின் நண்பர்
  • கோகுலா-தருணி – இவரே கோகுல இறை வழிபாட்டின் அனைத்து இளம் பெண்களாவார்.
  • தாமோதர ரதி – இவர் தாமோதரனை (கிருஷ்ணர்) விரும்புவதற்கு அவரே உடையாகிறார்.
  • ராதாராணி – அரசி ராதா
  • ராதாகிருஷ்ணா – கிருஷ்ணர் அவரே ராதாவின் வடிவத்தில் (ராதா உடனான கிருஷ்ண வழிபாடு)
  • விரஜ்ரனி – விரஜ் இன் அரசி (கிருஷ்ணர் அரசராக இருந்தபோது)
  • ஸ்வாமினிஜி – கிருஷ்ணரின் நண்பர்

அவர் பெயர்களுள் ஒன்றான, ஹரா (நாரத-பஞ்சரத்ரம் 5.5.59 இல் குறிப்பிடப்பட்டது), விளிவேற்றுமையில் ஹரே என்பது, மிகவும் புகழ்பெற்ற வேத மந்திரங்களுள் ஒன்றான ஹரே கிருஷ்ணா ‘மஹா-மந்திரத்தின்’ ஒரு பகுதியை கௌடிய வைஷ்ணவர்களின் மத்தியில் தோற்றுவித்தது. கௌடிய வைஷ்ணவ மதப் பழக்க வழக்கங்களில் ராதாராணியின் பெயர் மிக முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது.

ராதாராணியின் ஒவ்வொரு பெயரின் சாரத்தையும் நாமாவளியுடன் முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு – ஐபிஎ சமஸ்கிருதத்தின் 100 நன்னிமத்தமான பெயர்கள்.

ராதாவிற்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கோயில்கள்

  • வட இந்தியாவின், மதுரா மாவட்டத்தில் உள்ள பார்சானா மற்றும் பிருந்தாவனில் ராதாவல்லப் கோயில் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் ராதா மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[14][15]
  • அமெரிக்காவின், டெக்ஸாஸில் உள்ள ஆஸ்டினில் காணப்படும் பார்சனா தாம் என்ற மேற்கு பூமியின் அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய இந்து கோயில்களுள் ஒன்றாகும்.[16]

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோயில் தெய்வங்களின் பெயர்கள் பொதுவாக முதலில் ராதாரணி என்றும் பின்னர் கிருஷ்ணர் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீமதி ராதாராணியின் கருணையின் மூலம் கிருஷ்ணரை அணுக முடியும், அத்துடன் வேறு எவராலும் முடியாது. உதாரணத்திற்காக, ஒருவர் பிருந்தாவனில் உள்ள கோவிந்தாஜி கோயிலிற்குள் நுழைந்திருந்தால், தெய்வங்கள் ராதா கோவிந்தா என்று பெயரிடப்பட்டு இருக்கும், அத்துடன் கிருஷ்ணரின் பக்தர்கள் அவரை மட்டுமின்றி, ராதா மற்றும் கோவிந்தா ஆகிய இருவரையும் வழிபட்டிருக்க வேண்டும். ஏனெனில் ராதாராணியின் அன்பினால் கிருஷ்ணர் கட்டுண்டுள்ளார்.

ராதாவைப் பற்றிய மேற்கோள்கள்

  • “இரவின் தொடக்கத்தில் நிலாவின் சுடரொளி மிகச்சிறந்ததாக இருந்தபோதும், பகல்நேரத்தில் அது மங்கிப் போனதாக இருக்கும். அதேபோல, பகல் நேரத்தின் போது தாமரை அழகாக இருந்தாலும், இரவு நேரத்தில் அது முடிவுறும். ஆனால், என்னுடைய நண்பர்களே, என்னுடைய மிகவும் அன்புக்குரிய ஸ்ரீமதி ராதாராணியின் முகம், இரவு மற்றும் பகல் இரண்டின்போதும், எப்போதும் பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கிறது. ஆகவே எதை அவருடைய முகத்துடன் ஒப்பிடுவது?” (விதக்த-மாதவா 5.20)
  • “ஸ்ரீமதி ராதாராணி சிரிக்கும்போது, மகிழ்ச்சி அலைகள் அவர் கன்னங்களைக் கடந்து செல்லும், மேலும் அவரின் வில்லைப் போன்ற வளைந்த கண்புருவங்கள் அழகு மிக்க வானவில்லைப் போல் நடனமாடும். அவரின் கடைக்கண் பார்வையின் வசீகரம், மதிமயக்கத்தின் காரணமாக தடுமாறித் திரியும் பெரிய வண்டின் நடனத்தைப் போல இருக்கும். அந்த வண்டு என் இதயத்தின் நடுவில் இருக்கும் சிறிய வளையத்தை கடிப்பது போல இருக்கும்.” (விதக்த-மாதவா 2.51)
  • “ஸ்ரீமதி ராதாராணி, கிருஷ்ணரின் மிகவும் அன்புக்குரியவர், அதேபோல அவரின் குளிக்கும் குளம் மிகவும் அருமை நிறைந்தது. அனைத்து கோபியர்களில், அவர் கடவுளின் மிகவும் அன்பிற்குரியவர்.” (பத்ம பூரணம்)
  • “இயற்கைக்கு அப்பாற்பட்ட பெண் தெய்வம் ஸ்ரீமதி ராதாராணி, கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான சரிநேர் படிவமாவார். அவர் எல்லா நற்பேறுடைய பெண் தெய்வத்தின் மையத் தோற்றம் ஆவார். அவர் கடவுள் தன்மையுடைய அனைத்து-கவர்ச்சிமிக்க ஆளுமையை ஈர்ப்பதற்கான முழுமையான வசீகரத்தை சொந்தமாய்க் கொண்டுள்ளார். அவர் புராதனமான கடவுளின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.” (பிரைஹட் கௌதமிய தந்திரம்)
  • “கடவுள் மாதவனுள் ஸ்ரீ ராதா புகழ் பெற்றதைப் போல, அவர் துணையாக ஸ்ரீ ராதா அனைத்து மனிதர்களுக்கு மத்தியில், புகழ்பெற்று விளங்குகிறார்.” (ரிக்-பரிஸிஸ்தம்)
  • “ராதாராணி ஆன்மா சம்பந்தப்பட்ட அகத் தூண்டுதலின் மூலமாவார்.” (ஏ.சி பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபதா)

அடிக்குறிப்புகள்

  1. Beck, Guy L. (2005). Alternative Krishnas: regional and vernacular variations on a Hindu deity. Albany, N.Y: State University of New York Press. பக். p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7914-6415-6.
  2. எச்.வில்ஸன், ஆங்கில மொழிபெயர்ப்புடனான பிரம்மவைவர்த பூரணம், மோதிலால் பனர்ஸிதாஸ் புத்தக வெளியீட்டாளர், 1990 ஆம் ஆண்டின் மறு பதிப்பு.
  3. சுரேஷ் சந்திராவின் இந்துக் கடவுள்கள் மற்றும் பெண் தெய்வம் பற்றிய கலைக்களஞ்சியம். http://books.google.co.in/books?id=mfTE6kpz6XEC&pg=PA199&dq=goddess+lakshmi
  4. http://www.festivalsinindia.net/goddesses/radha.html
  5. இந்து மதத்தில் ராதா, கடவுள் கிருஷ்ணரின் விருப்பமான மனைவி, மேலும் லட்சுமியின் அவதாராமாவார். சமயச்சார்பான பக்தியில் அவர் கடவுளுக்கான மனித ஆன்மாவின் பேராவலை சுட்டிக்காட்டுகிறார்: சொற்றொடர் மற்றும் புராணக்கதையின் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி | 2006 | எலிஸெபத் நோவ்லெஸ் |
  6. http://www.vedabase.net/sb/10/45/3/en
  7. ஸ்வாமி திரிபுராரி, “ஸ்ரீ ராதா: மறைமுக ஆட்சி செய்பவர்”, சங்கா , 1999.
  8. Taran Singh (1992). Guru Nanak, his mind and art. Bahri Publications. பக். 142. ISBN 81-7034-066-7, ISBN 978-81-7034-066-9.
  9. Bimanbehari Majumdar (1969). Kṛṣṇa in History and Legend. India: University of Calcutta. பக். 307.பிபி.85-86
  10. Singh, K.B. (2004). "Manipur Vaishnavism: A Sociological Interpretat1on". Sociology of Religion in India. http://books.google.com/books?hl=en&lr=&ie=UTF-8&id=2cIOqGcvHqoC&oi=fnd&pg=PA125&dq=Nimbarka+Radha+first&ots=-y8T8YWEQr&sig=DILJQAFDN4c9WGtNY-z0khzONYk. பார்த்த நாள்: 2008-05-03.
  11. Kinsley, D. (1972). "Without Krsna There Is No Song". History of Religions 12 (2): 149. doi:10.1086/462672. http://books.google.com/books?hl=en&lr=&ie=UTF-8&sa=G&oi=qs&q=nimbarka+radha+first+author:d-sarma. பார்த்த நாள்: 2008-05-03.“நிம்பர்காவின் பார்வையில், அவர்களின் வழிபாட்டுக் கொள்கை முறையின் மையத்தைப் போல, முதன் முதலில் அனைவரும் அறிந்த மத வழிகாட்டியாக ராதா கருதப்படுகிறார் (பதின்மூன்றாம் நூற்றாண்டு)”
  12. சைதன்ய சரிதமிரித்தா மத்ய-லீலா 8.282
  13. கோபால தபானி அப்பானிஷத் 2.12,28,118
  14. ராதாவல்லாப் கோயில்
  15. கண்ணனைக் கண்டு கண் திறந்த ராதை
  16. பல்கலைக்கழக எழுத்துச் செய்தி

வெளி இணைப்புகள்

பொதுவான செய்திகள்

திருவிழாக்கள்

ராதாவின் பெயர்கள்

கூடுதலான ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.