பிரம்ம வைவர்த்த புராணம்

பிரம்ம வைவர்த்த புராணம் (தேவநாகரி:) என்பது மகா புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணம் பதினெட்டாயிரம் (18,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இப்புராணம் பிரம்ம காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், ஸ்ரீகிருஷ்ண காண்டம் என்று நான்கு காண்டங்களைக் கொண்டதாகும்.

பெயர்க் காரணம்

வைவர்த்தம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு பரிணாம வளர்ச்சி என்று பொருள். எனவே பிரம்மனின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கின்ற புராணமான இது பிரம்ம வைவர்த்த புராணம் என்று அழைக்கப்படுகிறது.

கணேச காண்டம்

இக் காண்டத்தில் விநாயகரின் வரலாறும், பெருமைகளும் கூறப்படுகின்றன. பார்வதி தேவி கிருஷ்ண விருதம் இருந்து கிருஷ்ணனையே குழந்தையாக பெற்றார். அக் குழந்தை பிறந்த நாளில் கைலாசத்தில் பெரும் விழா நடந்தது. அதற்கு முனிவர்கள், தேவர்கள், யட்சகர்கள் என அனைவரும் வந்தார்கள். அவர்களில் சூரியனின் குமாரனான சனியும் வந்தார். ஆனால் குழந்தையை காணாமல் இருந்தார். அதைக் கண்ட பார்வதி தேவி சனிபகவானை குழந்தையை காணும் படி கூறினார்.

சனியின் பார்வையால் குழந்தையின் தலை மறைந்தது. அதன் பிறகு கிருஷ்ணன் கருடனாக மாறி பூமியை வலம் வந்தார். அப்போது ஓர் ஆற்றங்கரையில் ஐராவதம் உறங்குவதை கண்டு அதன் தலையை சக்ராயுதத்தினால் கொய்தார். அதன் தலையை கைலாயத்தில் இருந்த தலையில்லா குழந்தையுடன் இணைத்தார்.

கஜானனன் , லம்போதரன் , ஏகதந்தன், விக்கினஹரன் என விநாயகரின் பல பெயர்களுக்கான காரணங்களை இப்புராணம் விளக்குகிறது.

[1] [2]

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=11013 பிரம வைவர்த்த புராணம் பகுதி-1
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=11014 பிரம வைவர்த்த புராணம் பகுதி-2


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.