ஈசா வாஸ்ய உபநிடதம்

ஈசா வாஸ்ய உபநிடதம் (Isha Upanishad) சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ளது.இந்த உலகங்கள் அனைத்தும் ஈச்வரனால் நிரம்பப் பெற்றுள்ளது என்று துவங்குவதால் (ஈசா வாஸ்ய இதம் சர்வம்), இந்த உபநிடதத்தினை ஈசா வாஸ்ய உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வுபநிடதம் 18 மந்திரங்களை மட்டுமே கொண்டுள்ள சிறிய உபநிடதமாகும்.இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர், மற்றும் மத்வர் விளக்க உரை எழுதி உள்ளனர். [1].[2]

ஈசா வாஸ்ய உபநிடதம்
தேவநாகரிईशा
தொடர்பான வேதம்சுக்லயசூர் வேதம்
பாடல்களின் எண்ணிக்கை1718
உரையாசிரியர்ஆதிசங்கரர்

உபநிடதத்தின் சாந்தி மந்திரமும் விளக்கமும்

பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி ||

ஈச்வரன் பூரண வடிவானவர். சீவனும் பூரண வடிவானவன்.பூரணமான ஈச்வரனிடமிருந்து பூரணமான சீவன் தோண்றியுள்ளான். பூரணமான சீவனுடைய பூர்ண வடிவத்தை எடுத்துவிட்டால் எஞ்சி இருப்பது பூரணம் மட்டுமே. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

உபநிடதத்தின் மையக்கருத்து

அனைத்து உயிரினங்களும் அண்டங்களும் இறைவனால் நிரம்பப்பட்டுள்ளது. தியாகத்தால் தன்னை காத்துக் கொள்ள வேண்டும். யாருடைய பொருள்களை கைப்பற்ற ஆசை கொள்ளக் கூடாது. எல்லா உயிரினங்களில் ஆத்மதத்துவத்தை பார்க்கின்றவனுக்கு மயக்கம் இல்லை, துயரம் இல்லை. வேதத்தில் கூறப்பட்ட கர்ம யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர்களுக்கு பலனாக சொர்க்கலோகம், பிதுர்லோகம் கிடைக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட பக்தி யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர்களுக்கு அதைவிட சற்று மேலான உலகங்கள் கிடைக்கிறது. கர்ம யோகத்துடன், பக்தி யோகத்தையும் சேர்ந்து செய்பவர்களுக்கு பிரம்மலோகம் கிடைக்கிறது. மேற்படி உலகங்கள் நிலையற்றதாக இருந்த போதிலும், துயரமிக்க வாழ்வில் அடையப்படும் உயர்ந்த பலனாக கருதப்படுகிறது. கர்ம யோகம் மற்றும் பக்தி யோகத்துடன்மெய்ப்பொருள் அறிவான ஞான யோகம் என்ற வேதாந்தத்தை தகுதியான குருவின் மூலம் கேட்டு அறிந்து கொண்டவனுக்கு பிறப்பு, இறப்பு இல்லாத மேலான பெருவாழ்வான விதேக முக்தி அடைவது உறுதி.

மேற்கோள்கள்

  1. https://archive.org/details/EssenceOfIsavasyaUpanishad
  2. https://ia700704.us.archive.org/14/items/UpanishadsTamil/07_Isavasya_Upanishad.pdf

ஆதாரநூல்கள்

  • ஈசாவாஸ்ய உபநிடதம், ஸ்ரீராமகிருஷ்ணா மடம், மைலாப்பூர், சென்னை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.