நாரத புராணம்

நாரத புராணம் (தேவநாகரி:नारदीय पुराण, நரத புராணா) என்பது பதினெண் புராணங்களில் நாரதரைப் பற்றி கூறுவதாகும். இப்புராணம் இருபத்தி ஐந்தாயிரம் (25,000) சுலோகங்களைக் கொண்டது.

நாரத முனிவர் சனத்குமாரர்களுக்கு கூறிய நாரத புராணத்தினை மீண்டும் சூதர் என்பவருக்கும், முனிவர்களுக்கும் கூறினார். இதில் நாரத முனிவரின் பிறப்பு, அவருக்கு கிடைத்த தட்சனின் சாபம், பிரம்மனின் சாபம், மனிதனாக நாதரர் பிறந்தமை, சனிபகவான் பார்வை நாரதர் மேல் பட்டது, இராமாயணம், நாரதர் தமயந்தி திருமணம் போன்றவைகள் அடங்கியுள்ளன.[1]

நாரத புராணத்தின் ஓர் உறுப்பான குருபாவனபுர மகாத்மியத்தில் குருவாயூர் குருவாயூரப்பன் திருத்தல வரலாறு கூறப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/news.php?cat=274 நாரத புராணம்
  2. கண்ணன் திருக்கோயில்கள்; பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்; பக்கம் 302
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.