திருக்குருகை மான்மியம்

திருக்குருகை மான்மியம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால்இயற்றப்பட்டது. [1] வாழ்த்து, பதிகம் ஆகியவற்றை அடுத்து 28 சருக்கங்களை உடையதாக இந்த நூல் இருந்தது. [2] பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழும் எந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.

இந்த சூலைப் பற்றிய சில குறிப்புகள்

  • இந்த மான்மியத்தைப் பராசர முனிவர் தன் மகன் வியாச முனிவருக்குக் கூற, அவர் சுகருக்குக் கூறினார். இவ்வாறு வந்த நூலை ஆதிநாத பட்டர் என்பவர் மொழிபெயர்த்து நூலாசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயருக்குக் கூறக் கேட்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நூல் அரங்கேற்றப்பட்ட காலம் 1548 [3]

பாடல் - எடுத்துக்காட்டு [4]

1

வாழி வாழி நானிலமும் மும் மாரியின் வளனும்
வாழி வாழி இல்லறமும் நல்லறப் பெருவனப்பும்
வாழி வாழி நாலாயிரப் பனுவல் நான்மறை நூல்
வாழி வாழி சீ பராங்குச ஆணை வைகலுமே. [5]

2

போத மேதகப் பூரணன் பூமகள்
காத வான் எனக் கண்டவர் மாளிகை
வேத வாய்மையும் மெய்த்தமிழ் வாய்மையும்
கீத வாய்மையும் கிள்ளை மிழற்றுமே. [6]

3

நாவாரவே புகழ்ந்து 'நாராயணா நம' என்று
ஓவா உரையினொடும் மண்ணீர் உரம் நனைப்ப
காவார் மலர் பறித்துக் 'கண்ணா' நின் கால் கமலம்
தூவாதார் கையினையும் கை என்று சொல்வாரே [7] [8]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 275-282.
  2. உ. வே. சாமிநாதையர், செந்தமிழ் மாத இதழ், 1938
  3. கொல்லம் 723
  4. பொருள் விளங்குமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  5. இது கடவுள் வாழ்த்துக்கு முன்னர் இடம் பெற்றுள்ள நூலின் தொடக்கப்பாடல்.
  6. பாடல் 462
  7. சொல்வாரோ?
  8. பாடல் 1220
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.