ஈசுவரமுனி

ஈசுவரமுனி என்பவர் வைணவ சமய ஆச்சாரியார். நாதமுனிகளின் மகன். ஆளவந்தாரின் தந்தை. நாதமுனிகள் இறக்குமுன் வைணவ மறையெழுத்து மந்திரத்தை ஓம் நமோ நாராயணாய தன் மாணவர்களான குறுக்கைக் காவலப்பன், உய்யக்கொண்டார் ஆகியோருக்குச் சொல்லிவைத்தார். தன் மகனாகிய ஈசுவர முனிக்குச் சொல்லவில்லை. ஈசுவரமுனி திருமந்திரத் திருவருள் பெறத் தகுதி இல்லாதவர் எனத் தந்தை கருதினார் போலும்.

ஈசுவரமுனி தமது தந்தைக்கும் முன்பே இளமையிலேயே இறந்தார்.[1]

ஈசுவரமுனி செய்த தனியன் பாடல் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழிக்கு உகந்த தனியனாக நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இடம் பெற்றுள்ளது. அது:

திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005.
  1. ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு; சுவாமி ராமகிருஷ்ணானந்தர்;பக்கம் 44
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.