திருமண்

திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள். [1]

வடகலை திருமண் காப்பு
தென்கலை திருமண் காப்பு

விளக்கம்

வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது. வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.[2]

வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை

வைணவ சம்பிரதாயத்தில் வடகலை, தென்கலை [3] என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.

திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

தென்கலை திருமண்

(பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்)

வடகலை திருமண்

வடகலை திருமண்

வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்).

திருநாமம் இட்டுக் கொள்ளும் முறை

நாராயணனின் பனிரெண்டு பெயர்களைக் குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் சம்பிரதாயம்.[4]

  1. நெற்றி
  2. நடு வயிறு (நாபி)
  3. நடு மார்பு (மார்பு)
  4. நடுகழுத்து (நெஞ்சு)
  5. வலது மார்பு
  6. வலது கை
  7. வலது தோள்
  8. இடது மார்பு
  9. இடது கை
  10. இடது தோள்
  11. பின்புறம் அடிமுதுகு
  12. பின்புறம் பிடரி

மந்திரங்கள்

திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாளின் நாமங்கள்:

கேசவாய நம என்று நெற்றியிலும்
நாராயணாய நம என்று நாபியிலும்
மாதவாய நம என்று மார்பிலும்
கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
விஷ்ணவே நம என்று வலது மார்பிலும்
மதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்
த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
வாமனாய நம என்று இடது நாபியிலும்
ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்
பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்
தாமோதராய நம என்று பிடரியிலும்
திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.