மகான் ஸ்ரீவாதிராஜர்

மகான் ஸ்ரீவாதிராஜர் (A.D 1481-1601)[1] மத்வ குருமார் வரிசையில் இரண்டாவது குரு. இவர் கி.பி. 1480 ஆண்டு காலத்தில் வாழ்ந்தவர். கர்நாடகத்தில் உடுப்பியில் ஹீவினிகேரே எனும் இடத்தில் அவதரித்தார். தமது எட்டாவது வயதிலேயே துறவறம் மேற்கொண்டார். இவரது குரு வாகீசதீர்த்தர். சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளில் புலமை பெற்ற இவர் பல நூல்கள் மற்றும் துதிகள் இயற்றியுள்ளார். இவர் வகுத்த சம்பிரதாயங்கள் இன்றளவும் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பின்பற்றப்படுகின்றன. இவரது உபாசனா தெய்வம் கல்விக் கடவுளான ஹயக்ரீவர். இவரது சமகாலத்தவர் திருப்பதி பெருமாள் மீது அன்பு கொண்ட புரந்தரதாசர்.[2][3]

ஹயக்ரீவபண்டி

வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், வெல்லம் மற்றும் நெய் சேர்த்து செய்யப்பட்ட ஹயக்ரீவபண்டி எனும் பிரசாதம் ஹயக்ரீவருக்கு மிகவும் பிடித்தது என்பதால், தினசரி வழிபாடு முடிந்தவுடன் இப்பிரசாதத் தட்டை ஹயக்ரீவருக்குப் படைப்பதற்காக தமது தலைமேல் இவர் வைத்துக்கொள்வார். ஹயக்ரீவரும் வெள்ளைக் குதிரை வடிவில் வந்து அதனை உண்டு செல்வாராம்.[3]

தீர்த்த பிரபந்தம்

தாம் இயற்றிய தீர்த்த பிரபந்தம் எனும் நூலில் புண்ணிய நதிகளின் தெய்வீகப் பெருமைகளையும் மக்களின் பாவங்களை நீக்கும் புண்ணிய நதிகளின் சக்திகளையும் விவரித்துள்ளார். புனித நதிகளை மனதால் நினைப்பதும், மானசீகமாக வழிபடுதலும்,அவற்றில் நீராடுதலும் அளிக்கும் சிறப்புகளையும் விவரித்துள்ளார்.[1]

சோதே ஆலயம்

கர்நாடக மாநிலத்தில் சீர்ஸி எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள சோதே ஆலயம் இவர் பிருந்தாவனப் பிரவேசம் செய்த திருத்தலம்.[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.