முதலியாண்டான்

வைணவப் பெரியோர்களில் மிகவும் புகழத்தக்க முதலியாண்டான் கிபி 1027 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை)எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (இராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாக பிறந்தார்."தாசரதி" எனும் இயற்பெயருடைய இவர் வைணவ குருவான இராமானுசரின் மருமகன் ஆவார்.

முதலியாண்டான்
பிறப்புதாசரதி
நசரத்பேட்டை, சென்னை, தமிழ்நாடு
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு

பிற பெயர்கள்

  • இராமானுசன் பொன்னடி
  • யதிராஜ பாதுகா
  • வைஷ்ணவதாசர்
  • திருமருமார்பன்
  • இராமானுச திருதண்டம்
  • நம்வதூல தேசிகன்
  • வைஷ்ணவசிரபூஷா
  • ஆண்டான்

பஞ்ச நாராயணன்

இராமானுசரின் முதல் மாணாக்கராகிய இவர் தன் ஆச்சாரியன் ஆணைப்படி கர்னாடகாவில் உள்ள பேளூர் எனும் ஊரில் முறையே கீர்த்தி நாராயணன் (தலக்காட்), செளம்ய நாராயணன்(நாகமங்களா), நம்பி நாராயணன்(தொண்டனூர்), கேசவநாராயணன்(பேளூர்) மற்றும் வீர நாராயணன்(கடக்) எனும் ஐந்து நாராயணத் தலங்களை நிர்மாணித்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.