திருமலையாழ்வார்

திருமலையாழ்வார் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியவர்களில் ஒருவர். திருமலையாழ்வார் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை ஆகும்.[1] இவர் திருவாய்மொழிப் பிள்ளை எனச் சிறப்புப்பெயர் பெற்றவர். வடமொழியில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர் அந்நூல்கள் காட்டும் கண்ணனை விடத் திருவாய்மொழி நூலில் காட்டப்படும் கண்ணன் மேலானவன் என உணர்ந்தார். இதனால் தன் மாணவர் மணவாள மாமுனிகள் என்பவருக்கு தாம் திருநாடு செல்லும் காலத்தில் (இறக்கும் தருவாயில்) தம் ஏனைய மாணவர்களை மணவாள மாமுனிகளிடம் ஒப்படைத்துவிட்டு இதனைக் கூறினார்.

  • சமஸ்கிருத சாஸ்திரத்தில் பலகால் கண் வையாதீர். இராமானுசர் பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய விளக்க உரையான ஸ்ரீபாஷ்யத்தை உணர்ந்து அதனைப் பிரவசனம் செய்துகொண்டு திருவரங்கத்திலேயே நித்திய வாசம் பண்ணும்
  • திவ்வியப் பிரபந்தங்களின் உள்நோக்கங்களையும், வைணவ சம்பிரதாயங்களையும் மணவாள மாமுனிகளுக்குப் புகட்டியவர்.

மேற்கோள்கள்

  1. கொந்தகைப் பெருமாள் கோயில்

கருவிநூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.