இலட்சுமணன்

இராமாயணத்தின்படி இலட்சுமணன் (அல்லது இலக்குவன்) அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் சுமித்ரா. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரைப் பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப்போரில் இராவணின் மகனான இந்திரஜித்தை வீழ்த்தினார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.மேலும் இலங்கைப்போரில் இலக்குவன் கொல்லப்பட்டதாகவும் அதன் பின் சஞ்சீவினி எனும் மூலிகையை உண்டு மறுஉயிர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.[1][2]

இலங்கைப்போரில் இலக்குவன் இராவணின் மகனான இந்திரஜித்துடன் போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் மூர்ச்சை அடைந்தார், அதன் பிறகு அனுமான் உதவியினால் சஞ்சீவினி மூலிகையின் மூலம் மூர்ச்சையில் இருந்து விடுபட்டு மீண்டும் இந்திரஜித்துடன் போர் புரிந்து அவனைப் போரில் வீழ்த்தினார். அதன் பிறகு இராமன் வனவாசம் முடிந்து அயோத்தியை ஆட்சி செய்த முழுகாலமும் இராமன் உடன் இருந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.