பாரதர்கள்

பாரதர்கள் (Bhāratas) இருக்கு வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில், விசுவாமித்திரரால் கூறப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த வேத கால இன மக்கள் ஆவார்.[1]

இருக்கு வேதம், மண்டலம் 7, பகுதி 18-இல் கூறப்பட்ட பத்து மன்னர்களின் போரில் பாரதர்களின் தலைவன் சுதாசும் பங்கு கொண்டார். போரில் வெற்றி அடைந்த பாரதர்கள் குருச்சேத்திரம் பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.[2]

பாரதர்களின் ஆட்சியாளர்கள் பின்னாட்களில் புருவுடன் இணைந்து, குரு நாட்டை நிறுவினர்.[3]

பிந்தைய வேத கால மகாஜனபத மக்களிடையே நடந்த ஆதிக்கப் போட்டியில் பாரதர்கள் வென்றமையால், மகாபாரத இதிகாசம், குரு நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களை பரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிக்கிறது. [4]

பேரரசர் பரதனின் பெயரால் தற்கால இந்தியாவை அதிகாரப்பூர்வமாக, பாரத நாடு என்றும் அழைக்கின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Scharfe, Hartmut E. (2006), "Bharat", in Stanley Wolpert, Encyclopedia of India, 1 (A-D), Thomson Gale, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-684-31512-2
  2. ORIGINS AND DEVELOPMENT OF THE KURU STATE by Michael Witzel, Harvard University
  3. National Council of Educational Research and Training, History Text Book, Part 1, India
  4. Julius Lipner (2010) "Hindus: Their Religious Beliefs and Practices.", p.23
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.