மகாஜனபதம்

மகாஜனபதம் (Mahājanapada, சமசுகிருதம்: महाजनपद) என்பது பண்டைய இந்தியாவில் கி மு 600 முதல் கி மு 300 முடிய காணப்பட்ட அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். அங்குத்தர நிக்காய[1] போன்ற பண்டைய பௌத்த சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை இந்திய துணை க்கண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளாகும்.

மகாஜனபதம்

கிமு 600–கிமு 300 [[மௌரியப் பேரரசு|]]
மகாஜனபதங்களின் அமைவிடம்
16 மாகாஜனபாதங்களின் வரைபடம்
தலைநகரம் குறிக்கப்படவில்லை
சமயம் வேதகால இந்து சமயம்
பௌத்தம்
சமணம்
அரசாங்கம் குடியரசுகள்
முடியாட்சி
வரலாற்றுக் காலம் இரும்புக் காலம்
 - உருவாக்கம் கிமு 600
 - குலைவு கிமு 300
கிமு 500ல் இருந்த மகாஜனபத நாடுகள்

பதினாறு அரசுகள்

  1. அங்கம்
  2. கோசலை
  3. காசி
  4. மகதம்
  5. வஜ்ஜி
  6. மல்லம்
  7. சேதி
  8. வத்சம்
  9. குரு
  10. பாஞ்சாலம்
  11. மத்சம்
  12. சூரசேனம்
  13. அஸ்மகம்
  14. அவந்தி
  15. காந்தாரம்
  16. காம்போஜம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.