ஆரியர்

ஆரியர் எனும் சொல்லானது குறித்த மக்கள் கூட்டம் ஒன்றினை மானிடவியல் அடிப்படையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆரியர் - சொல் வரலாறு

ஆரியர் என்ற சொல் சமஸ்கிருத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. இச்சொல் முதன் முதலாக ரிக் வேத நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது. ஆனால் இது தற்காலத்தில் மேன்மையான, புனிதமான போன்ற இன மேன்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாக மாற்றப்பட்டது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின் இனவாதத்தை அடுத்து இது ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது. நாசிகள் போரில் தோல்வியுற்றபோது ஆரியர் பற்றிய கருத்து ஐரோப்பாவில் கண்டனத்துக்கு இலக்காகி கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. எனினும், தெற்காசியாவில் குறிப்பாக பிரித்தானியர் ஆட்சி நீங்கிய பின்னர் ஆரியர் பற்றிய கருத்து புத்துயிர் பெற்றது[1].

இதனையும் பார்க்கவும்

தமிழ்நாட்டில் ஆரியர்

மேற்கோள்கள்

  1. ப. 143, இந்திரபாலா, கா., இலங்கையில் தமிழர், குமரன் புத்தக நிலையம், சென்னை/கொழும்பு, 2006
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.