மகாபிரஜாபதி கௌதமி

மகாபிரஜாபதி கௌதமி (Mahāpajāpatī Gotamī) பௌத்த சமயத்தின் முதல் பெண் துறவி இவரேயாகும். கௌதம புத்தரால் துறவற தீட்சை வழங்கப்பட்டவரும், புத்தரின் முதன்மையான பத்து சீடர்களில் ஒருவருமாக இருந்தார்..[1][2]

மகாபிரஜாபதி கௌதமி மடியில் குழந்தை சித்தார்த்தன்

இவர் புத்தரின் அன்னையான மாயாவின் உடன் பிறந்த தங்கை ஆவார். [3]புத்தர் பிறந்த சில நாட்களில் மாயாதேவி இறந்து விட்டதால், இவரே புத்தரின் வளர்ப்புத் தாயாக இருந்தார். இவர் மகனின் பெயர் நந்தன் ஆகும். பின்னாட்களில் நந்தனும் புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார். [2] [4]

மகாபிரஜாபதி கௌதமி தனது 120-ஆம் வயதில் பரிநிர்வாணம் அடைந்தவர். [5]

கௌதம புத்தரின் தந்தை சுத்தோதனரின் இறப்பிற்குப் பின்னர், மகாபிரஜாபதி கௌதமி துறவறம் மேற்கொள்ள முடிவு செய்து, புத்தரிடம் தனக்கு துறவற தீட்சை வழங்கி சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். சங்கத்தில் பெண் துறவிகளை சேர்ப்பதில்லை என்ற காரணத்தினால், புத்தர் இவருக்கு துறவற தீட்சை வழங்க மறுத்து விட்டார். ஆனால் துறவறம் மேற்கொள்ளத் தளராத மனம் கொண்ட கௌதமி வைசாலி நகரத்திற்குச் சென்று தன் தலை முடியை நீக்கி மஞ்சள் ஆடை அணிந்து கொண்டார். [6]

பெரும் எண்ணிகையிலான சாக்கியப் பெண்கள் இவரைத் தொடர, புத்தரை மீண்டும் அணுகி துறவற தீட்சை வேண்டினார். புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தர் பரிந்தரைத்தன் பேரில் மகாபிரஜாபதி கௌதமிக்கு புத்தர் துறவற தீட்சை வழங்கினார்.

பின்னாளில் மகாபிரஜாபதி கௌதமி புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.