பிம்பிசாரன்

பிம்பிசாரன் (சமஸ்கிருதம்: बिम्भिसार, கிமு 558 - கிமு 491) மகத நாட்டை கிமு 543 முதல் தன் இறுதி வரை ஆண்ட ஹரியங்கா வம்சத்தை சார்ந்த ஒரு அரசன்.[1] இவருடைய மகன் அஜாதசத்ரு ஆவான். இவர் கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவர்.[2]

பிம்பிசாரன்
கௌதம புத்தரை வரவேற்கும் மன்னர் பிம்பிசாரன்
ஹரியங்கா வம்சம்தின் நிறுவனர்
ஆட்சிக்காலம் அண்.கி மு 544 – அண்.492 (52 ஆண்டுகள்)
முன்னையவர் பாட்டியா
பின்னையவர் அஜாதசத்ரு
வாழ்க்கைத் துணை கோசல தேவி
செல்லனா
கேமா
வாரிசு
அஜாதசத்ரு, அபயன்
தந்தை பாட்டியா
மரபு ஹரியங்கா வம்சம்
பிறப்பு கி மு 558
இறப்பு கி மு 491
சமயம் பௌத்தம், சமணம்
ராஜகிரகத்தில் பிம்பிசாரன் அடைக்கப்பட்டிருந்த சிறை

வாழ்க்கை

பௌத்த ஜாதக கதைகளில் இவனைப்பற்றி அறியக்கிடைக்கின்றன. இவன் புத்தரின் சமகாலத்தவன். இவன் அங்கதத்தை வென்று சம்பாவை தலைநகராகக் கொண்டு தன் மகன் அஜாத சத்ருவை ஆளச்செய்தான். புத்தர் ஞானம் பெறுவதற்குமுன் ஒரு முறை அவரை சந்தித்துள்ளான். புத்தர் ஞானம் பெற்ற பின் அவரின் முக்கிய சீடர்களில் ஒருவனானான். பௌத்தத்தில் ஒரு நிலையான சோத்பன்னத்தை அடையப்பெற்றதாக கூறப்படுகிறது.

சமண சமயக் குறிப்புகளில், இவனை ராஜகிரகத்தின் அரசன் ஷ்ரேனிக் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணங்கள்

இவன் அரசுகளுக்கிடையே தனது நிலையை திடப்படுத்தவே தனது திருமணங்களைப் பயன்படுத்தியுள்ளான். இவனது முதல் மனைவி கோசல நாட்டின் அரசனின் மகளும் பிரசன்ஜித்தின் தங்கையுமாவாள். இத்திருமணத்தின் மூலம், காசியை வரதட்சினையாகப்பெற்றான். இத்திருமணத்தின் மூலம் கோசலத்திற்கும் மகதத்திற்குமான பகை முடிவுக்கு வந்தது மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கிடையேயான உறவை தன்னிச்சைப்படி முடிவெடுக்கும் வசதியையும் பெற்றான். இவனது இரண்டாம் மனைவி லிச்சாவி வம்சத்தைச்சார்ந்த வைசாலி நாட்டைச்சார்ந்த செல்லனா ஆவாள். இவனது மூன்றாம் மனைவி கேமா , பஞ்சாபைச் சார்ந்த மத்திர நாட்டு மன்னர் மகளாவாள்.

மறைவு

வரலாற்றின்படி பிம்பிசாரன் தனது மகன் அஜாத சத்ருவினால் சிறைப்பிடிக்கப்பட்டு பசியினால் வாடி உயிர்நீத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வு கிமு 491 வாக்கில் நடந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது

மேற்கோள்கள்

  1. பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்.
  2. https://books.google.co.in/books?id=0IquM4BrJ4YC&pg=PT87&dq=bimbisara&redir_esc=y#v=onepage&q=bimbisara&f=false
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.