காத்தியாயனர்

காத்தியாயனர் (Kātyāyana) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஒருவர். இவரது பெயர் பல்வேறாக சமசுகிருதம், பாலி, தாய், சிங்கள, மொழிகளில் குறிக்கப்பட்டுள்ளது. பாலி மொழியில் கச்சாயனர் அல்லது மகா கச்சாயனர் என குறிக்கப்பட்டுள்ளது.


காத்தியாயன மகாதேரர்
சமயம்பௌத்தம்
தர்மா பெயர்(கள்)மகா கச்சாயனர்
சுய தரவுகள்
தேசியம் இந்தியன்
பிறப்புகாஞ்சனன் (தங்க நிறத்தவன்)
உதேனி, உஜ்ஜைன் நகரம், இந்தியா
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்
மாணவர்கள்சோன குடிகன்ன மகாதேரர்
தாய்லாந்து பௌத்த மரபுப் படியான காத்தியானரின் சிலை

திரிடவச்சா - சண்டிமா இணையருக்கு உச்சையினி நகரத்தில் பிறந்த காத்தியாயனர், குரு அசிதரின் குருகுலத்தில் வேத சாத்திரங்களைப் பயின்றவர். பின்னர் புத்தர் ஞானம் அடைந்த பின் அவரின் நெருங்கிய தோழராகவும், சீடராகவும் இருந்தவர்.

அவந்திதேசம், உஜ்ஜைன், மாளவம் போன்ற மத்திய இந்தியப் பகுதி மக்களை பௌத்த சமயத்திற்கு மாற்றியவர். தாமரை சூத்திரம் (Lotus Sutra) அத்தியாயம் 6-இல் காத்தியாயனர், சாரிபுத்திரர், மகாகாசியபர், சுபூதி, ஆனந்தர், உபாலி, நந்தன், மௌத்கல்யாயனர் ஆகிய சீடர்களுக்கு புத்தர் தர்மம் குறித்து அருளிச் செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் விகாரையில் பௌத்த மரபுப் படியான காத்தியானரின் சிலை உள்ளது.

ஆதார நூற்பட்டியல்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.