முத்திரை (பரதநாட்டியம்)

கை அசைவுகள் அல்லது முத்திரைகள் (சமசுகிருதம்: ஹஸ்தங்கள்) பரதநாட்டியத்தில் ஒரு முக்கியக் கூறாகும். கை அசைவுகளை பரத நாட்டியத்தில் (சமஸ்கிருதத்தில்) ஹஸ்தம் என சிறப்பாக அழைப்பர். கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது. இதை தமிழில் முத்திரை என்பர். பரதநாட்டியத்தில் அடவு,அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும். கைவிரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயிப்பதனையே கைமுத்திரை அல்லது ஹஸ்தங்கள் எனக் கூறுவர். பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை ஒற்றைக்கை [இணையாக்கை], இரட்டைக்கை [இணைந்த கை] என இரண்டாகப் பிரயோகப்படுத்துகின்றனர்.இவை தவிர்ந்த அபூர்வ முத்திரைகளும் உண்டு.

நாட்டிய முத்திரைகளின் தொகுப்பு

முத்திரைகள்

ஒற்றைக்கை முத்திரைகள்

ஒரு கையால் செய்யப்படுவதால் ஒற்றைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் அசம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்தெட்டாகும்.

முத்திரைகருத்துசெய்முறைபடிமம்
பதாகம்கொடிபெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல்.
திரிப்பதாகம்மூன்று பாகம் கொண்ட கொடி அல்லது மரம்பதாகத்தில் மோதிர விரலை மடித்தல்.
அர்த்தப்பதாகம்அரைக்கொடிதிரிப்பதாகத்தில் சுண்டி விரலை மடித்தல்.
கர்த்தரீமுகம்கத்தரிக்கோல்திரிப்பதாகத்தின் மடித்த விரல்களுடன் பெருவிரலை சேர்த்தல்.
மயூரம்மயில்திரிப்பதாகத்தில் மடித்த மோதிர விரலுடன் பெருவிரலை சேர்த்தல்.
அர்த்தச்சந்திரன்அரைச்சந்திரன்பதாகத்தில் உள்ள பெருவிரலை நீட்டுதல்.
அராளம்வளைந்ததுசுட்டு விரலுடன் பெருவிரலை சேர்த்துப் பிடித்தல்.
சுகதுண்டம்கிளி மூக்குபதாகத்தில் சுட்டு விரலையும் மோதிர விரலையும் மடித்தல்.
முட்டி(முஷ்டி)முட்டிகைஅனைத்து விரல்களையும் பொத்துதல்.
சிகரம்உச்சிமுட்டியில் உள்ள பெருவிரலை விரித்தல்.
கபித்தம்விளாம்பழம்சிகரத்தின் பெருவிரலை சுட்டு விரலால் பொத்துதல்.
கடகாமுகம்வளையின் வாய்நடுவிரல் பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் ஆகியவற்றை சேர்த்துப் பிடித்தல்.
சூசிஊசிமுட்டியில் உள்ள சுட்டு விரலை நீட்டுதல்.
சந்திரகலாபிறைச்சந்திரன்சூசியில் உள்ள பெரு விரலை நீட்டுதல்.
பத்மகோசம்தாமரை மொட்டுகையின் விரல்களை அரைவாசிக்கு மடித்தல்.
சர்ப்பசீசம்பாம்பின் படம்பத்மகோசத்தைவிட சற்று மடித்து S வடிவில் சுற்றல்.
மிருகசீசம்மான் தலைபெருவிரல் மற்றும் சுண்டிவிரல் தவிர்ந்த விரல்களை 45° இல் மடித்தல்.
சிம்மமுகம்சிங்கத்தின் முகம்நீட்டியபடியுள்ள நடுவிரலையும் மோதிரவிரலையும் பெருவிரலுடன் சேர்த்தல்.
காங்கூலம்அங்குலத்தை விட குறைந்ததுமோதிரவிரலை மடித்து மற்ற விரல்களால் மடித்துப் பிடித்தல்.
அலபத்மம்மலர்ந்த தாமரைசுண்டி விரலை அதிகம் மதிப்பதோடு மோதிரவிரலையும் சற்று மடித்தல்.
சதுரம்சாதூர்யம்மிருகசீசத்தில் உள்ள பெருவிரலை உள்ளே மடித்தல்.
பிரமறம்வண்டுஆட்காட்டி விரலை உள்ளே மடித்து பெருவிரலையும் நடு விரலையும் சேர்த்துப் பிடித்தல்.
கம்சாசியம்அன்னத்தின் அலகுபெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் நீட்டியபடி சேர்த்தல்.மற்ற விரல்கள் விரிந்து இருக்கும்.
கம்சபக்சம்அன்னத்தின் சிறகுமிருகசீசத்தில் நீட்டி உள்ள பெருவிரலை ஆட்காட்டி விரல் பக்கமாக சேர்த்தல்.
சம்தம்சம்இடுக்கிவிரல்களை நீட்டியபடி மூடி திறந்து மூடுதல்.
முகுளம்மொட்டுவிரல்களை நீட்டியபடி சேர்த்துப் பிடித்தல்.
தாம்ரசூடம்சேவல்மற்ற விரல்கள் பொத்திய நிலையில் ஆட்காட்டிவிரலைஅரைவாசி மடித்தல்.
திரிசூலம்சூலம்மற்ற விரல்கள் மூடிய நிலையில் சுண்டிவிரளையும் பெருவிரலையும் சேர்த்துப் பிடித்தல்.

இரட்டைக்கை முத்திரைகள்

இரு கையாலும் செய்யப்படுவதால் இரட்டைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் சம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது. இவை இருபத்து நான்காகும்.

முத்திரைகருத்துபடிமம்
அஞ்சலிவணங்குதல்
கபோதம்புறா
கர்கடம்நண்டு
சுவஸ்திகம்குறுக்கிட்டது
டோலம்ஊஞ்சல்
புஸ்பபுடம்மலர்க்கூடை
உத்சங்கம்அணைப்பு
சிவலிங்கம்சிவலிங்கம்
கடகாவர்த்தனம்கோர்வையின் வளர்ச்சி
கர்த்தரீ ஸ்வஸ்திகம்குறுக்குக் கத்தரிக்கோல்
சகடம்வண்டி
சங்குசங்கு
சக்கரம்சக்ராயுதம்
சம்புடம்பெட்டி
பாசம்கயிறு
கீலகம்பிணைப்பு
மத்சயம்மீன்
கூர்மம்ஆமை
வராகம்பன்றி
கருடன்கருடப்பறவை
நாகபந்தம்பாம்பின் கட்டு
கட்வாகட்டில்
பேருண்டம்பேருண்டப்பறவை
அவகித்தம்குறுக்கே மலர்ந்த தாமரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.