குசிநகர்

குசிநகர் அல்லது குஷி நகர் (Kushinagar, Kusinagar or Kusinara) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், குசிநகர் மாவட்டத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்தாக உள்ளது. கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம். கோரக்பூரிலிருந்து கிழக்கே 53 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. குசிநகரம் அனைத்துலக பௌத்தர்களின் புனித தலமாக விளங்குகிறது.[2][3]

குசிநகர்
कुशीनगर
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்குஷிநகர் மாவட்டம்
அரசு
  வகைநகரப் பஞ்சாயத்து
மக்கள்தொகை (2011)
  மொத்தம்22,214[1]
மொழிகள்
  அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்274403
இணையதளம்www.kushinagar.nic.in

மக்கள் பரம்பல்

2011ஆம் ஆண்டு நடத்தப்ப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குசிநகர மக்கட்தொகை 22,214 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 52%, பெண்கள் 48% ஆக உள்ளது. மொத்தம் 3462 வீடுகள் கொண்டுள்ளது. எழுத்தறிவு விகிதம் 78.43%.[1][4]

அமைவிடம்

கோரக்பூரின் கிழக்கே 53 கிலோ மீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலை எண் 28இல் அமைந்துள்ளது குசி நகரம்.[5][6] அருகில் அமைந்த தொடருந்து நிலையம் கோரக்பூர் ஆகும்.

படக்காட்சியகம்

புத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி

கௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் பரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வானக் காட்சியை குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

A Literary History of Deoria & Kushinagar by Prof.(Dr.) M.A. Lari Azad (USM 1998 Ghaziabad)

  1. "Kushinagar City Census". பார்த்த நாள் 17 July 2015.
  2. W. Owen Cole, Peggy Morgan Six Religions in the Twenty-First Century 2000 - Page 204 "Kushinara. Here, near modern Kasia in Uttar Pradesh, is the site of the Buddha's death. A temple commemorates the Buddha's final ..."
  3. "Kushinagar". பார்த்த நாள் 17 July 2015.
  4. Census of India: Population Finder, http://censusindia.gov.in/PopulationFinder/View_Village_Population.aspx?pcaid=1249&category=N.P.
  5. "Kushinagar geography". பார்த்த நாள் 18 July 2015.
  6. "Kushinagar". பார்த்த நாள் 18 July 2015.

வெளி இணைப்புகள்

https://www.google.co.in/maps/place/Kushinagar+Vipassana+Center/@26.7378232,83.8857087,17z/data=!3m1!4b1!4m2!3m1!1s0x0:0x43903748fcdbde0f www.kushinagar.net


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.