வைசாலி, பண்டைய நகரம்

வைசாலி (Vaishali), இந்தியாவின், பிகார் மாநிலத்தின், வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் நகரமாகும். இந்நகரம் கி மு ஆறாம் நூற்றாண்டில் வஜ்ஜி குடியரசின் தலைநகராக விளங்கியது.

வைசாலி, பண்டைய நகரம்
वैशाली
Vaiśālī
நகரம்
சிங்கத்துடன் கூடிய அசோகரின் தூபி, வைசாலி
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்வைசாலி மாவட்டம்
மொழிகள்
  அலுவல் மொழிகள்மைதிலி , இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்844128
வைசாலியில் உள்ள புத்தரின் நினைவு ஸ்தூபி

.

வைசாலியில் உள்ள புத்தரின் சிலை.

சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் வைசாலி நகரத்தில் கி மு 539இல் பிறந்தவர். கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், கி மு 483இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில் தான் மேற்கொண்டார். கி மு 383இல் வைசாலியில் இரண்டாம் பௌத்த மாநாடு நடந்தது. எனவே வைசாலி நகரம், பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் புனித தலமாக விளங்குகிறது.[1][2][3]

இந்நகரில் அசோகரின் தூண்கள் அமைந்துள்ளன. இங்குள்ள 36 அடி உயர தூணின் உச்சியில் சிங்கத்தின் உருவம் அமைந்துள்ளது. மேலும் செங்கற்களால் கட்டப்பட்ட குன்று போன்ற தூபியும் உள்ளது.

கி பி 4ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி பாஹியான் மற்றும் கி பி 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகிய இருவரும் தங்களது பயணக் குறிப்பில் வைசாலி நகரத்தை குறித்துள்ளனர். அக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பிரித்தானிய தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர், 1861ஆம் ஆண்டில் தற்போதைய வைசாலி மாவட்டத்தில் உள்ள பஸ்ரா எனும் கிராமத்தை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு, காலத்தால் காணாமல் போன வைசாலி நகரத்தை கண்டுபிடித்தார்.[4][5]

அமைவிடம்

வைசாலி நகரம் பாட்னாவிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாபர்பூர் நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம்

இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம், விஷ்வசாந்தி தூண் அருகே அமைந்துள்ளது.

இதனையும் காண்க

வைசாலியில் குறிப்பிடத்தக்க பௌத்த சின்னங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.