மைதிலி மொழி

மைதிலி மொழி (मैथिली) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில், இந்திய-ஈரானிய மொழிகள் குழுவின் துணைக் குழுவான இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான பீஹாரிலும், நேபாளத்தின் தேரை (Terai) பகுதியிலும் பேசப்படுகின்றது. மொழியியலாளர் இதனை ஒரு கிழக்கு இந்திய மொழியாகக் கருதுவதால், மத்திய இந்திய மொழியான ஹிந்தி மொழியில் இருந்தும் இது வேறுபட்டது. இது ஹிந்தி, வங்காளம் ஆகிய இரு மொழிகளினதுமே கிளை மொழியாகக் கருதப்பட்டு வந்தது. 2003 ல் மைதிலி மொழி, இந்தியாவில் தனி மொழித் தகுதியைப் பெற்றுக்கொண்டது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இதற்கு அலுவல் மொழித் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான இயக்கத்தின் காரணமாக மைதிலி மொழிக்கு 2003 இல் இத் தகுதி வழங்கப்பட்டது.

மைதிலி மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-1bh (பீஹாரி மொழி)
ISO 639-2mai
ISO 639-3mai

மைதிலி மொழி மரபு வழியாக மைதிலி எழுத்து முறையில் எழுதப்பட்டு வந்தது. வங்காள மொழி எழுத்துக்களை ஓரளவுக்கு ஒத்த இவ்வெழுத்தை, திர்ஹுத்தா அல்லது மிதிலக்ஷர் என்றும் குறிப்பிடுவது உண்டு. கைத்தி எழுத்து முறையிலும் இது எழுதப்படுவது உண்டாயினும், இன்று பெரும்பாலும் தேவநாகரி எழுத்து முறையே பயன்பாட்டில் உள்ளது. மரபு வழியான மைதிலி எழுத்து முறையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மைதிலி என்ற பெயர் முற்காலத்தில் ஒரு தனி அரசாக இருந்த மிதிலா (மிதிலை) என்பதன் பெயரிலிருந்து பெறப்பட்டது. இதற்கு வளமான இலக்கியமும் உள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.