உபாலி

உபாலி (Upali) (சமசுகிருதம் उपालि upāli) தொழில் முறையில் இவர் அரண்மனை நாவிதர் ஆவார். பின்னர் கௌதமபுத்தரின் சீடர்களில் ஒருவராகச் சேர்ந்து தனது அறநெறியாலும், ஞானத்தினாலும் புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார். கௌதம புத்தர் காலத்தில் பௌத்த நெறிகள் மற்றும் பிக்குகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய வினய பீடகத்தை தொகுத்தவர் ஆவார்.

உபாலி
சமயம்பௌத்தம்
பாடசாலைவினய பீடகம்
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்

ஒரு முறை கௌதம புத்தருக்கு உபாலி முடி வெட்டும் போது, உபாலி வேகமாக மூச்சிறைத்தார். மூச்சு காற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் மூச்சிறைப்பை நீக்கும் முறையை புத்தர் அறிந்து கூறினார். ஒரு முறை கௌதம புத்தர் ஏழு இளவரசர்களை, சமூகத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உபாலியை, வணக்கம் செலுத்தக் கூறினார். அவர்களும் உபாலியின் குறைந்த பிறப்பைக் கருதாமல் வணக்கம் செலுத்தியதன் மூலம் உபாலி கௌரவிக்கப்பட்டார்.[1]பௌத்த பிக்குகள் சமுதாயத்துடன் சேர்ந்து வாழும் விதிமுறைகளை உபாலி தொகுத்தார். பின்னர் திரி பீடகங்களில் ஒன்றான வினய பீடகம் எனும் பௌத்த தத்துவ நூலை உபாலி தொகுத்தார்.

மேற்கோள்கள்

  1. Upali

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.