சிராவஸ்தி

சிராவஸ்தி (Shravasti) கௌதம புத்தர் காலத்தில் மகத நாட்டில், பண்டைய இந்தியாவின் பெரிய ஆறு நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இந்நகரம் மகத நாட்டில் இருந்தது.

சிராவஸ்தி
சிராவஸ்தி
சிராவஸ்தி நகர ஜேடவனத்தில் புத்தரின் குடில்
இந்தியாவில் அமைவிடம்.
இருப்பிடம்சிராவஸ்தி நகரம், உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆயத்தொலைகள்27°31′1.5″N 82°3′2.2″E
வகைஊர்

தற்போது இந்நகரம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சிராவஸ்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கங்கைச் சமவெளியில், லக்னோவிலிருந்து வடகிழக்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில், இந்திய - நேபாள நாடுகளின் எல்லைக்கு அருகில், மேற்கு ரப்தி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. இந்நகரம் கௌதம் புத்தருடன் நெருங்கிய தொடர்புடையது.

கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தின் ஜேடவனத்தில் இருபத்து நான்கு முறை சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டார்.[1]

இந்நகரத்திற்கு அருகில் சகேத்-மகேத் கிராமத்தில் (Sahet-Mahet) கௌதம புத்தர் தொடர்புடைய தொன்மை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் காணப்படுகிறது.

வேத காலத்தில் கி மு ஆறாம் நூற்றாண்டு முதல் கி பி ஆறாம் நூற்றாண்டு முடிய, சிராவஸ்தி நகரம் கோசல நாட்டின் தலைநகராக விளங்கியது.

சமண சமயத்தின் மூன்றாம் தீர்த்தங்கரரான சம்பவநாதரின் பிறப்பிடமாக சிராவஸ்தி நகரம் கருதப்படுகிறது. நாகார்ஜுனரின் கூற்று படி, கி பி ஐந்தாம் நூற்றாண்டில் மகத நாட்டின் தலைநகராக இருந்த ராஜகிரகத்தின் மக்கள் தொகையை விட சிராவஸ்தி நகரம் ஒன்பது இலட்சம் மக்கள் தொகையுடன் விளங்கியது.

புத்தர் தியானம் செய்வதற்கும், மக்களுக்கு நல் அறங்களை உபதேசிப்பதற்கும் அனாதபிண்டிகன் என்ற பெரும் வணிகன் தேஜ வனத்தில் அமைத்த பூங்கா ஒன்றை தற்போது தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டது.

அற்புதம் செய்த புத்தரின் சிலை, ஆண்டு கி பி 100 - 200, சிராவஸ்தி நகரம்
அனாதபிண்டிகனின் நினைவுத் தூண், சிராவஸ்தி

கௌதம புத்தர் வைசாலி நகரத்தை விட்டு சிராவஸ்தி நகரத்தில் வந்து தங்கியிருந்த காலத்தில், அனாதபிண்டிகன், விசாகா முதலியவர்கள் புத்தருக்கு உதவினார்கள்.

சிராவஸ்தி நகரில் தங்கியிருந்த காலத்தில் புத்தர் நான்கு பௌத்த தரும நிக்காயங்களை அருளிச் செய்தார்.

சீன பௌத்த யாத்திரிகன் யுவான் சுவாங் சிராவஸ்தி நகரத்தின் கட்டிட இடிபாடுகளை பதிவு செய்துள்ளார்.[2]

தாய்லாந்து, தென் கொரியா, இலங்கை, மியான்மர், திபெத் மற்றும் சீனா நாட்டு பௌத்தர்கள் சிராவஸ்தி நகரத்தில் புத்தகயா போன்று இங்கும் பௌத்த மடாலயங்களை நிறுவியுள்ளனர்.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.