நிர்வாணம்

நிர்வாணம் (Nudity) என்பது ஒரு மனிதன் உடையற்ற நிலையில் இருப்பதை குறிக்கும். ஆடையணிவது என்பது மனித இனத்திற்கே உரித்தான ஒரு தனிப்பண்பாகும். ஆடைகளின் அளவானது சூழ்நிலையையும் சமூக மதிப்பீடுகளையும் சார்ந்தது ஆகும். சில நேரங்களில் மிகக் குறைந்த அளவு உடையே (பாலுறுப்புகளை மறைப்பதற்கு) போதுமென்றும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

முற்றிலும் நிர்வாணமான மனிதர் புகைப்படம் எடுத்தார்.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற பன்னாட்டு நிர்வாண மிதிவண்டிச்சவாரியில் பங்கேற்ற ஓரு நிர்வாண ஆண்.
நிர்வாணப் பெண் (பெண் மாதிரி)

வரலாறு

படுக்கையில் ஒர் ஆடையற்ற இணை.

வரலாற்றின் தொன்ம காலத்தில் வெப்ப இடங்களில் வாழ்ந்த மனிதர் உடையணியவில்லை. அண்மைக்காலம் வரை அந்தமான் தீவுகள், ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் வசித்த பல பழங்குடிச் சமூகங்கள் உடையணியவில்லை. இன்னும் இப்படி சில சமூகங்கள் உண்டு. குளிர் பிரதேச மக்கள் தோல் இலை போன்றவற்றால் உடலைப் பாதுகாத்திருக்கலாம்.

தற்கால மனிதர் பெரும்பாலும் காலைநிலை, அழகு, பயன்பாடு, ஒழுக்கம் கருதி உடை அணிவது வழக்கம். எனினும் அன்றாட வாழ்வில் நீராடும் பொழுது, சிலர் படுக்கும் பொழுது நிர்வாணமாக இருப்பார்கள். கடற்கரை, இரவு கோளிக்கை விடுதிகள் போன்ற நிர்வாணம் அனுமதிக்கப்படும் இடங்களும் உண்டு.

பொதுவிடத்தில் நிர்வாணம்

நிர்வாணம் தொடர்பான சமூகத்தின் அணுகுமுறை பண்பாடு, காலம், இடம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன. தற்காலத்தில் உடையணிவதே, குறிப்பாக பாலியல் உறுப்புகளை மறைத்து உடையணிவதே அனேக சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விதிவிலக்கான பல சமூகங்களும் உண்டு. தென் அமெரிக்காவில் ஆபிரிக்காவில் உள்ள சில பழங்குடிவாசிகள் நிர்வாண நிலை அவர்களின் இயல்பான நிலையாக இருக்கிறது. ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிர்வாணத்தை அனுமதிக்கும் பல இடங்கள் உண்டு.

நிர்வாணமும் சமயமும்

இந்து

இந்து சமயத்தில் நிர்வாணமாக இருப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. பாசம், ஆசை, பொருள், உடை விடுவதே பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலைக்கு உதவும் என்ற கருத்தும் உள்ளது. குறிப்பாக நாக சாதுக்கள் நிர்வாணமாக இருப்பர். இந்துக் கோயில்களில் நிர்வாண சிற்பங்கள் சாதாரணம்.

இசுலாம்

இஸ்லாத்தில் ஆண்கள் தங்களது தொப்புளிருந்து முட்டங்கால் வரை மறைக்க வேண்டும் என்றும், பெண்கள் முகத்தையும் மணிக்கட்டுக் கையையும் தவிர கட்டாயமாக மறைக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ளது.

கிறித்துவம்

கிறிஸ்தவத்தில் நிர்வாணம் இரு திருமணமான தம்பதிகளுக்கு இடையே மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சமணம்

சமணத்தில் நிர்வாணம் பரிந்துரைக்கப்படுகிறது. முற்றிலும் துறந்த நிலைக்கு நிர்வாணம் அவசியமாகக் கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.