நான்கு உயர்ந்த உண்மைகள்

நான்கு உயர்ந்த உண்மைகள், கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு அருளியதாகும். [1]

நான்கு உயர்ந்த உண்மைகளை கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு எடுத்துரைத்தல்

மனிதர்கள் மனநிறைவான வாழ்க்கையை வகுத்துக் கொள்ள, புத்தர் அருளியதே நான்கு உயர்ந்த உண்மைகள் ஆகும். அவைகள்: [2]

  1. துன்பம் ("துக்கம்"): பிறப்பு, நோய், முதுமை, இறப்பு மற்றும் பசி மனிதர்களால் தவிர்க்க இயலாத துன்பங்கள். மேலும் பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவைகளையும் மனிதருக்குத் துன்பத்தைத் தருபவைகள்.
  2. ஆசை / பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
  3. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
  4. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

இந்த நான்கு உண்மைகளை விழிப்புணர்வுடன் அறிந்து, நன்னெறியுடன் வாழ்பவர்களை, அருகத நிலையை அடைந்தவர் என பௌத்தம் கூறுகிறது.[3] [4]

மேற்கோள்கள்

  1. The Four Noble Truths of Buddhism
  2. The Four Noble Truths
  3. Arhat
  4. Warder 1999, பக். 67.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.