ஆனந்தர்

ஆனந்தர் புத்தரின் அணுக்கச் சீடர் ஆவார். புத்தரின் உறவினரான இவர் அவருடன் சேர்ந்து பல பகுதிகளுக்கும் சென்றவர்; புத்தர் பேசியவற்றை மனதில் நிறுத்திக் கொண்டவர். சுத்த பிடகத்தில் உள்ள பல சூத்திரங்கள் இவரால் நினைவிலிருந்து கொண்டு வரப்பட்டவையே. முதல் பௌத்தப் பெருங்குழுமத்தில் புத்தரின் போதனைகள் பலவற்றையும் இவரே நினைவுகூர்ந்து கூறினார். இதன் காரணமாக இவர் “தம்மத்தின் பாதுகாவலர்” என அறியப்படுகிறார்.

ஆனந்தர்
போற்றுதலுக்குரிய ஆனந்தர்
Ananda at First Council.jpg
முதல் பௌத்தப் பெருங்குழுமத்தில் சுத்த பிடகத்தை நினைவு கூரும் ஆனந்தர்
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்

புத்தரின் கூற்றுப் படி ஒவ்வொரு புத்தரும் தம் பிறவியில் இரண்டு முதன்மைச் சீடர்களையும் ஒரு அணுக்கச் சீடரையும் கொண்டிருப்பர். அந்த வகையில் கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களாக மகாகாசியபர், சாரிபுத்ரரும், மொக்கல்லானரும் விளங்கினர். அணுக்கச் சீடராக ஆனந்தர் விளங்கினார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.