பேட்சே குகைகள்

பேட்சே குகைகள் அல்லது பேட்சா குகைகள் (Bedse Caves - Bedsa Caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில், புனே மாவட்டத்தின், மவல் தாலுக்காவில் உள்ள இரண்டு பௌத்தக் குடைவரை குகைகளின் தொகுதியாகும்.

பேட்சா பௌத்த குடைவரையின் சைத்தியம்

பேட்சா குகைகள், பாஜா குடைவரையிலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது. இக்குடைவரைகள், சாதவாகனர் ஆட்சிக்கு முன்னர் [1]கிமு முதலாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[2]

பேட்சா குடைவரை குகைகள் இரண்டு முக்கியத் தொகுதிகளாக உள்ளது. இதில் குகை எண் 7ல் சைத்தியத்துடன் கூடிய பிக்குகளின் தியான மண்டபமும், பெரிய தூபியும் கொண்டது. குகை எண் 11ன் குடைவரை விகாரையின் நுழைவாயில், குதிரை லாட வடிவத்தில், புடைப்புடன் கூடிய போதிகை அமைக்கப்பட்டுள்ளது.[3]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Michell, 351
  2. Harle, 54
  3. Michell, 351-352

மேற்கோள்கள்

  • Harle, J.C., The Art and Architecture of the Indian Subcontinent, 2nd edn. 1994, Yale University Press Pelican History of Art, ISBN 0300062176
  • Michell, George, The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, 1989, Penguin Books, ISBN 0140081445

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.