இந்தியக் குடைவரைக் கோயில்கள்

பெரிய மலைகளை (வரைகளை) குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் கி.மு 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல்வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி. மு 2 – 3-ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்குப் பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில் அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.[1]

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும்[2] மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.[3]


பல்லவர்காலம்

பாண்டியர் குடைவரைகள்

  1. கழுகுமலை வெட்டுவான் கோயில்
  2. பிள்ளையார்பட்டிக் குடைவரை
  3. மலையடிக்குறிச்சிக் குடைவரை
  4. மகிபாலன்பட்டிக் குடைவரை
  5. அரளிப்பாறைக் குடைவரை
  6. திருமெய்யம் குடைவரைகள்
  7. திருத்தங்கல் குடைவரை
  8. செவல்பட்டிக் குடைவரை
  9. திருமலை கோயில் குடைவரை
  10. திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
  11. மணப்பாடுக் குடைவரை
  12. மூவரை வென்றான் குடைவரை
  13. சித்தன்னவாசல் குடைவரை
  14. ஐவர் மலைக் குடைவரை
  15. அழகர் கோவில் குடைவரை
  16. ஆனையூர்க் குடைவரை
  17. வீரசிகாமணிக் குடைவரை
  18. திருமலைப்புரம் குடைவரை
  19. அலங்காரப்பேரிக் குடைவரை
  20. குறட்டியாறைக் குடைவரை
  21. சிவபுரிக் குடைவரை
  22. குன்றக்குடிக் குடைவரைகள்
  23. பிரான்மலைக் குடைவரை
  24. திருக்கோளக்குடிக் குடைவரை
  25. அரளிப்பட்டிக் குடைவரை
  26. அரிட்டாபட்டிக் குடைவரை
  27. மாங்குளம் குடைவரை
  28. குன்றத்தூர் குடைவரை
  29. கந்தன் குடைவரை
  30. யானைமலை நரசிங்கர் குடைவரை
  31. தென்பரங்குன்றம் குடைவரை[4]
  32. வடபரங்குன்றம் குடைவரை
  33. சிதறால் மலைக் கோவில்

முத்தரையர் குடைவரைகள்

  1. மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்[5]

கர்நாடகா

மகாராட்டிரம்

மத்தியப் பிரதேசம்

  1. பாக் குகைகள்
  2. உதயகிரி குகைகள்
  3. தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்[6]
  4. தம்நார் குகைகள்

ஒடிசா

குஜராத்

  1. சியோத் குகைகள்
  2. காம்பாலித குகைகள்
  3. ஜுனாகத் குடைவரைகள்

ஆந்திரப் பிரதேசம்

பிகார்

ஜம்மு காஷ்மீர்

ஆதாரம்

  1. LIST OF ROCK CUT ARCHITECTURE
  2. முனைவர் கோமதி நாயகம் (2007). தமிழக வரலாறு (சங்ககாலம் முதல் இன்று வரை). இராஜ பாளையம்: கங்கா பதிப்பகம். பக். 54 – 69.
  3. http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314225.htm#251
  4. தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்
  5. http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/malaiyadi.htm
  6. Dharmrajeshwar, Mandsaur, Madhya Pradesh

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.