அமர்நாத்

அமர்நாத் குடைவரைகள் (Amarnath caves; இந்தி: अमरनाथ गुफा) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது[1].

அமர்நாத்
பெயர்
பெயர்:அமர்நாத்ஜி குடைவரை கோயில்
அமைவிடம்
அமைவு:அமர்நாத், ஜம்மு காஷ்மீர்,  இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அமர்நாத் (சிவன்)
வரலாறு
அமைத்தவர்:அமர்நாத் பாபா
புனித குடைவரையில் பனிக்கட்டி உருவில் சிவலிங்கம்

அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது[2]. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது[3].

இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது[4]. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன.

இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும்[2], ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது[5]. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.

இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாகும்.

படத்தொகுப்பு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.