ஆகத்து

ஆகத்து அல்லது ஓகஸ்ட் (August, /ˈɔːɡəst/ (listen) AW-gəst) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் எட்டாவது மாதத்தைக் குறிக்கும். அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.[1]

<< ஆகத்து 2019 >>
ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
MMXIX

கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (Sextilis) என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில், சனவரி, பெப்ரவரி மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில் யூலியசு சீசர் யூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீசரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகஸ்டு எனப் பெயரிடப்பட்டது.

காலநிலையின் அடிப்படையில், தெற்கு அரைக்கோளத்தின் ஆகத்து மாதம் வடக்கு அரைக்கோளத்தின் பெப்ரவரி மாதத்திற்கு சமனாகும்.

ஆகத்து மாத சிறப்பு நாட்கள்

மேற்கோள்கள்

  1. "August." Encyclopædia Britannica. 2008. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 23 செப்டம்பர் 2008.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.