திசெம்பர்

திசெம்பர் அல்லது டிசம்பர் (december) கிரெகொரியின் நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும்.

<< திசம்பர் 2019 >>
ஞா தி செ பு வி வெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
MMXIX

கிறித்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறித்துமசு இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தொடங்கும் அதே வார நாளிலேயே திசெம்பர் மாதமும் தொடங்குகிறது. அதே போல், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முடியும் அதே வார நாளிலேயே டிசம்பர் மாதம் முடிவடைகிறது.

வடக்கு அரைக்கோளத்தில் திசெம்பர் மாதத்திலேயே பகலொளி நேரம் மிகக் குறுகியதாக உள்ளது, அதே வேளையில் தெற்கு அரைக்கோளத்தில் இம்மாதத்திலேயே பகலொளி நேரம் மிக நீண்டதாக உள்ளது. வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் டிசம்பர் 1 ஆம் நாள் ஆரம்பிக்கிறது, தெற்கு அரைக்கோளத்தில் கோடைகாலம் திசெம்பர் 1 இல் ஆரம்பிக்கிறது.

சொல் தோற்றம்

இலத்தீன் மொழியில், decem என்பது "10" என்ற எண்ணைக் குறிக்கும். உரோம நாட்காட்டியில் மாதமில்லா குளிர்காலப் பகுதி சனவரி, பெப்பிரவரி என்பவற்றுக்கிடையே பிரிக்கப்படும் வரை டிசம்பர் 10ம் மாதமாக இருந்தது.

நிகழ்வுகள்

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.