தளவானூர்

தளவானூர் குடைவரைக் கோயில் (Thalavanur cave temple) அல்லது சத்ருமல்லேசுவரர் கோவில் (Satrumalleswarar Temple)[1] தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிமண்டகப்பட்டு எனும் ஊர்களுக்கு இடையே அமைந்த தளவானூரில் அமைந்துள்ளது.

தளவானூரில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இக்கோவில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது.[2] தெற்கு முகமாக 32 அடி நீளத்தில் தரைமட்டத்திலிருந்து 3.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[3]

இக்குடைவரைக் கோயிலின் மேல்புறத்தில் சமணர் படுகைகள் உள்ளது. இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "The writing on the cave". தி இந்து. பார்த்த நாள் 24 சூலை 2016.
  2. "Thalavanur Caves". பார்த்த நாள் 24 சூலை 2016.
  3. Thalavanur Cave Temple

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.