பிஞ்சூர் தோட்டம்

பிஞ்சூர் தோட்டம் அல்லது யதவீந்திர தோட்டம் (Pinjore Gardens / Yadavindra Garden) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பஞ்சகுல மாவட்டத்தில் பிஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தோட்டம் மொகலாயர் தோட்டக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பிஞ்சூர் தோட்டத்தை பாட்டியாலா அரச குல மன்னர்களால் மறுசீரமைக்கப்பட்டது. இத்தோட்டம் காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது.

பிஞ்சூர் தோட்டம்
யதவீந்திர மொகல் தோட்டம், பிஞ்சூர், அரியானா

இத்தோட்டம் சண்டிகரிலிருந்து 22 கிமீ தொலைவில் அம்பாலா - சிம்லா நெடுஞ்சாலையில் பிஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் ஆதரித்து வளர்க்கப்பட்ட நவாப் பிதாய் கான் என்ற வல்லுனரால் இத்தோட்டம் வடிவமைக்கப்பட்டது.

பாட்டியாலா நாட்டின் மன்னராக இருந்த யதவீந்திர சிங் நினைவைப் போற்றும் விதமாக, பாழாகிப் போயிருந்த பிஞ்சூர் தோட்டத்தை சீரமைத்து யதவீந்திர தோட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1]

அமைப்பு

பிஞ்சூர் தோட்டம்

தற்போதைய யதவீந்திரா தோட்டம் ஏழு அடுக்கு வரிசைகளுடன் கூடியது. உயரமான முதல் அடுக்கு வரிசையின் நுழைவாயிலில் இராசஸ்தான் - மொகலாயர் பாணியில் கட்டப்பட்ட சிஷ் மகால் என்ற பெரிய கண்ணாடி அரண்மனையும், இரண்டாவது அடுக்கு வரிசையில் சிவப்பு வண்னம் தீட்டப்பட்ட செங்கோட்டை அரண்மனையும், மூன்றாவது அடுக்கு வரிசையில் சைப்பிரஸ் மரங்கள், அடர்ந்த பூச்செடிகளின் வரிசைகள் மற்றும் பழத்தோட்டங்களைக் கொண்டுள்ளது. நான்காவது அடுக்கு வரிசையில் நீர் அரண்மனையும் (palace of water), சதுர வடிவ நீரூற்றுகளும், இளைப்பாற நீண்ட கல் படுக்கைகளும் உள்ளது. ஐந்தாவது அடுக்கு வரிசையில் மரத்தோட்டங்கள் கொண்டுள்ளது. இறுதியாக தாழ்வாக உள்ள வரிசையில் வட்ட வடிவ அரங்கம் அமைந்துள்ளது. அதனருகில் ஒரு சிறிய விலங்குக் காட்சிச்சாலை உள்ளது.

இரவில் பிஞ்சூர் தோட்டம்

போக்குவரத்து

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஞ்சூர் தோட்டத்திற்குச் செல்ல பேருந்து, தொடருந்து வசதிகள் உள்ளது. கல்கா தொடருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.