ஔரங்கசீப்
ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ஆலம்கீர் எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
ஔரங்கசீப் | |
---|---|
![]() | |
மயிலாசனத்தில் அமர்ந்தபடி ஔரங்கசீப். | |
![]() | |
ஆட்சிக்காலம் | 31 ஜூலை 1658 – 3 மார்ச் 1707 |
முடிசூடல் | 13 ஜூன் 1659, செங்கோட்டை, தில்லி |
முன்னையவர் | ஷாஜகான் |
பின்னையவர் | முதலாம் பகதூர் சா |
பட்டத்து அரசி (மனைவி) | தில்ராஸ் பானு பேகம் |
பிற மனைவியர் | நவாப் பாய் பேகம் தில்ராஸ் பானு பேகம் பேகம் உதயபுரி |
வாரிசு | |
முகமது சுல்தான் முதலாம் பகதூர் சா அசாம் ஷா சுல்தான் முகமது அக்பர் முகமது காம் பாக்ஷ் சேப்-உன்-நிசா சினாத்-உன்-நிசா | |
முழுப்பெயர் | |
அபு முசாபர் முகையுதீன் முகமது அவுரங்கசீப் | |
குடும்பம் | தைமூரியர் |
தந்தை | ஷாஜகான் |
மரபு | தைமூரியர் |
தாய் | மும்தாசு மகால் |
பிறப்பு | 4 நவம்பர் 1618 தாகோத், குஜராத் |
இறப்பு | 3 மார்ச்சு 1707 88) அகமத்நகர் | (அகவை
அடக்கம் | குல்தாபாத், அவுரங்காபாத் |
சமயம் | இசுலாம் |
சகோதரப்போர்

கி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. அவுரங்கசிப்பின் சகோதரர் தாராஷிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த அவுரங்கசிப் தன் சகோதரர் தாராஷிகவுடன் போரிட படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தரஷிகோவும் ஷாஜகானும் அவரை எதிர்த்து படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஆரங்கசீபுக்கு ஆசி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்து டெல்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் டெல்லி விரைந்தது அவுரங்க்சீபின் படை. டெல்லியில் தாரஷிகோவின் படையை சின்னாப்பின்னப்படுத்தினார் அவுரங்கசீப். தாரஷிகோ படுதோல்வியடைந்து சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானை சிறைபிடித்தார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீர் முடிசூட்டிக்கொண்டார்.
பேரரசர் ஆலம்கீர்

இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமரிசனத்திற்கு உட்பட்டதாகும். தனது ஆட்சியை கந்தகாரிலிருந்து தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினார்.
மராட்டியரும் இராசபுத்திரரும்
இராசபுத்திரர் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் அவுரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சிக் காலத்தில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால், மராட்டியர் நாட்டைப் பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியைச் சிறைப் பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுவைக் கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழகத்தில் இருந்த செஞ்சிக் கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளைப் பிடிக்க எண்ணி,ந முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.
தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு
தென் இந்தியாவின் நிலப்பகுதிகளை தக்காண பீடபூமி என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலைத்தொடர்களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தது. 1698-பிப்ரவரி 7-இல், அவுரங்கசீப்பின் தளபதி, சூல்பிகார் கான் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக (நவாப்) ஆக்கினார். வெற்றிகொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகர் ஐதராபாத் என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், அதிபராக(நிஜாம்=நிசாம்) இருந்து ஆட்சி செய்தவர்களே, ஐதராபாத் நிசாம்கள் என அழைக்கப் பட்டனர். செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய தமிழகம், ஆந்திரம், கன்னட மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்ததால், ஜீல்பிகார் கான் கர்நாடக நவாபு என்றே அப்போது அழைக்கப்பட்டார். பின்னர், 1710 ஆம் ஆண்டில், ஆளுநராக (நவாப்) வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்குப் பதிலாக, ஆற்காட்டைத் தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, ஆற்காட்டு நவாபு என அழைக்கப்பட்டார்.
இத்தகைய சிறப்பான ஆட்சி மேலாண்மை காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியைக் கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை ஒருங்கிணைந்த முதல் பேரரசர் என்ற வரலாற்றுப் புகழை அடைந்தார்.
சொந்த வாழ்க்கை

’ஆலம்கீர்’ எனில் பெர்சிய மொழியில் ‘பிரபஞ்சத்தை வெல்லப் பிறந்தவன்’ என்று பொருள். 1695ல் அவுரங்கசீபை நேரில் பார்த்த இத்தாலியைச் சேர்ந்த பயணி ’கேர்ரி’ என்பவர் எழுதியுள்ள குறிப்புகளின்படி அவுரங்கசீப் அதிக உயரம் இல்லை. அவரது மூக்கு பெரியது. கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு. எளிமையான தோற்றம். ‘நிக்கோலா’வின் கூற்றுப்படி, அவுரங்கசீப் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிக அலங்காரங்கள் கிடையாது. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிவார். அவையும் விலை உயர்ந்தது இல்லை.
“ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார். இஸ்லாத்தினை நன்றாகக் கடைபிடித்த ஒரே முகலாயமன்னர் இவர் மட்டுமே. எந்த சூழ்நிலையிலும் ஐந்து வேளையும் தொழத் தவறியதில்லை அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பரச் செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை.
1707ம் ஆண்டு வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீபின் உயிர் பிரிந்தது. அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய உயில் காட்டுகிறது:
அவுரங்கசீப்பின் உயில்
நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.
தன் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள். (முகலாயர்கள், நூலாசிரியர் -முகில், பக். எண் 307-312).
என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்.
என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்.
மூலம்
- இராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை.