கேந்திரிய வித்யாலயா

கேந்திரிய வித்யாலயா என்பது இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிருவகிக்கப்படும் பள்ளிக் கல்வி அமைப்பாகும். இது இந்தியாவில் மட்டுமின்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் ஆகிய இடங்களிலும் செயல்படுகிறது.

கேந்திரிய வித்யாலயா
அமைவிடம்
இந்தியா
தகவல்
குறிக்கோள்Tatvam Pooshan Apaavrunu
தொடக்கம்1963
பள்ளி அவைநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
ஆணையம்மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இணையம்kvsangathan.nic.in

அனைத்து கே.வி. பள்ளிகளிலும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறையும் பயிற்றுவித்தல் திட்டமும் பின்பற்றப்படுவதால் நடுவணரசு ஊழியர்கள் இடமாற்றம் பெறும் போது குழந்தைகளின் கல்வியில் சிக்கல் நேர்வதில்லை. மொத்தமாக 1,094 பள்ளிகள் இந்தியாவிலும் 3 பள்ளிகள் அயல் நாட்டிலும் செயல்பட்டுக்கொண்டு உள்ளன. இக்கல்வி அமைப்பானது உலகளாவிய சங்கிலித்தொடர் பள்ளிகளில் முதன்மையானது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.