தோமரா

தோமரா (Tomara) 9-12வது நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் தற்கால தில்லி மற்றும் அரியானா பகுதிகளை ஆண்ட இராஜபுத்திர அரச குலத்தினர் ஆவார். 12ஆம் நூற்றாண்டில் சௌகான் இராஜபுத்திர குலத்தினர் தோமாரா குலத்தினரை வென்றனர்.

வரலாறு

கூர்ஜர பிரதிகாரப் பேரரசர் முதலாம் மகேந்திரபாலனின் (885-910) ஆட்சிக் காலத்திய பொஹோவா (Pehowa) கல்வெட்டுகளில் தோரமரர்களைக் குறித்துள்ளது. கூர்ஜர பிரதிகார வம்சத்தின் விழ்ச்சியின் போது தோமரர்கள் தில்லியைக் கைப்பற்றி ஆண்டனர். [1] தோமர குலத்தின் நிறுவனரான முதலாம் அனங்கபாலன் கி பி 736இல் தில்லியை நிறுவினார். [2]

தேஜாபாலன், மந்தனபாலன், கீர்த்திகாபாலன், லக்கன்பாலன் மற்றும் பிருதிவிபாலன் ஆகியோர் அனங்கபாலனின் வழித்தோன்றல்கள் எனக் கருதப்படுகின்றனர். [3] தோமார வம்சத்தின் இறுதி மன்னர், தில்லி ஆட்சியை தனது மருமகன் பிரிதிவிராச் சௌகானிடம் ஒப்படைத்தார். [4]

மேற்கோள்கள்

  1. Swati Datta 1989, பக். 102.
  2. Sailendra Nath Sen 1999, பக். 339.
  3. Buddha Prakash 1965, பக். 182.
  4. P. C. Roy 1980, பக். 95.

ஆதார நூற்பட்டியல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.