சந்தர் மந்தர், புதுதில்லி

சந்தர் மந்தர் (Jantar Mantar, மாற்று ஒலிப்பு:ஜந்தர் மந்தர்) புது தில்லியின் கன்னாட்டு பிளேசிலிருந்து சன்சது மார்கில் அமைந்துள்ளது. செய்ப்பூர் மகாராசா இரண்டாம் ஜெய் சிங் 1723இலிருந்து கட்டி வந்த ஐந்து சந்தர் மந்தர்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு 13 கட்டிட வானியல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகலாய அரசர் முகம்மது ஷாவால் நாட்காட்டியையும் வானியல் அட்டவணைகளையும் திருத்துமாறு பணிக்கப்பட்டதை அடுத்து இங்கு கட்டமைக்கப்பட்டது. புது தில்லியின் சந்தர் மந்தர் வானாய்வக கருவிகளில் ஒன்றின் மீது 1910இல் பதிக்கப்பட்டுள்ள பட்டயத்தில் தவறாக 1710இல் கட்டப்பட்டது எனக் குறிக்கப்பட்டுள்ளது. பிந்தைய ஆய்வுகளின்படி இது 1724இல் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது.

ஜந்தர் மந்தர்
உள்ளூர் பெயர்
இந்தி: जंतर मंतर
கலவை இயந்திரம், சந்தர் மந்தர்
வகைவானாய்வகம்
அமைவிடம்புது தில்லி, இந்தியா
கடல் மட்டத்திலிருந்து உயரம்220.6 மீட்டர்கள்
நிறுவனர்மகாராசா ஜெய் சிங் II
கட்டப்பட்டது1724
இணையதளம்அலுவல்முறை வலைத்தளம்
சந்தர் மந்தர், புதுதில்லி
1858இல் சந்தர் மந்தர் - 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியின் போது இடிபட்டது.

இந்த வானாய்வகத்தின் முதன்மை நோக்கம் வானியல் அட்டவணைகளை தொகுப்பதும் சூரியன், நிலவு, கோள்களின் நேரம், இயக்கங்களை கணிப்பதுமாகும்.

1724இல் கட்டப்பட்ட தில்லி சந்தர் மந்தர் 1867இல் குறிப்பிடத்தக்க அளவில் பழுதடைந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.