முகம்மது ஷா

முகம்மது ஷா (Muhammad Shah= Roshan Akhtar) (محمد شاه) (1748 1702) , என்ற முகலாயப் பேரரசர் இந்தியாவை 1719 ஆண்டு முதல் 1748 வரை ஆண்டார்.[1][2][3] பகதூர் ஷா Iவின் நான்காவது மகனான சாகன் ஷாவின் மகன் ஆவார். தனது 17வது வயதில் சையத் சகோதரர்களின் உதவியால் அரியணை ஏறினார். பின்னர், அவர்களை அயிதராபாத் நிசாம் மேலாண்மையர் (சின் குயில்ட்சு கான்) உதவியுடன் விரட்டினார். மகிழ்ச்சி உருவாக்குபவர் என்ற பொருளுடைய ரங்கீலா என்ற அடைமொழியை வரலாற்று ஆய்வாளர்கள் இவருக்கு அளித்துள்ளனர்.[4]

முகம்மது சா ரங்கீலா
12வது இந்திய முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம் 27 செப்டம்பர் 1719 முதல்
26 ஏப்ரல் 1748 வரை
(28 ஆண்டுகள், 212 நாட்கள்)
முடிசூடல் 29 செப்டம்பர் 1719, தச்சீப்பூர்
முன்னையவர் சாசகான் II
பின்னையவர் அகம்மது சா பகதூர்
அரசுப்பிரதிநிதி சையத் சகோதரர்கள் (1719 - 1722)
வாழ்க்கைத் துணை பாட்சாபேகம்
(Malika-uz-Zamani)
மகால்பேகம்
(Malika-i-Jahan)
உதம்பை குத்சியாபேகம்
சாபியா சுல்தான்பேகம்
வாரிசு
சாரியர் சா பகதூர்
அகம்மது சா பகதூர்
தஜ் முகம்மது
அன்வர் அலி

பாட்சாபேகம்
சகன் அஃப்ரூசு பானுபேகம்
அசுரத்பேகம் (Sahiba-uz-Zamani)

முழுப்பெயர்
ரோசன் அக்தர் பகதூர்
குடும்பம் தைமூர் வம்சம்
தந்தை குசிட்டா அக்தர் ஜாகன் சா
தாய் குத்சியா பேகம்
பிறப்பு 17 ஆகத்து 1702
பதேப்பூர், முகலாயப் பேரரசு
இறப்பு 26 ஏப்ரல்1748 (வயது 45)
தில்லி, முகலாயப் பேரரசு
அடக்கம் உயர்வேலைச்சமாதி, நிசாமுதின் அவுலியா, தில்லி,முகலாயப் பேரரசு
சமயம் இசுலாம்

நாதிர் ஷாவின் படையெடுப்பு

1739ல் பாரசீகத்தின் அப்சரித்து வம்ச பேரரசர் நாதிர் ஷா, முகலாயப் பேரரசின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்றி, பின்னர் அரியானாவின் கர்ணல் பகுதியில் முகலாயப் படைகளுடன் போரிட்டார். போரில் தோல்வியடைந்த முகலாயப் பேரரசர் முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் படி, கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டதுடன், தனது மகனை நாதிர் ஷாவின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.[5]

காட்சியகம்

மேற்கோள்கள்

  1. Buyers, Christopher. "India, The Timurid Dynasty genealogy". The Royal Ark, Royal and Ruling Houses of Africa, Asia, Oceania and the Americas. பார்த்த நாள் 2009-06-12.
  2. Rai, Raghunath (2006). History For Class 12: Cbse. Economics/vk India Enterprises. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8187139692.
  3. Keene, H. G. (2004). The Fall of the Moghul Empire of Hindustan, Ch. III, 1719-48. Kessinger Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1419161849. Available here on Project Gutenberg.
  4. "This eighteen-year-old prince went down into the history as Muhammad Shah, nicknamed Rangeela (or merrymaker). Traditionally historians describe him as licentious and lazy but there can be little doubt that he is one of the most underrated personalities in history." (Khurram Ali Shafique, "Muhammad Shah 'Rangeela' in Dawn - The Review, October 2000). Retrieved 2009-08-17.
  5. வரலாற்றுப் பக்கங்கள் மார்ச் 22: நாதிர் ஷா டெல்லியை கைப்பற்றிய தினம்

இதையும் காணவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.