நரி

நரி நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி காட்டு விலங்கு. உருவில் ஓநாய்களைக் காட்டிலும் இவை சிறியதாக இருக்கும். உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. கடுங்குளிரான பனிபடர்ந்த ஆர்ட்டிக் முனைப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சுடுநிலமாகிய சகாராப் பாலைவனத்திலும் வாழ்கின்றன. மேற்கு நாடுகளில் நரி என்று பொதுவாக செந்நரியைக் குறிப்பிடுகின்றனர்.

நரி பெரும்பாலும் 2 - 3 ஆண்டுகள் வாழ்கிறது. ஆனால் பிடித்து வளர்க்கப்படும் நரிகள் பத்துக்கும் அதிகமான ஆண்டுகள் வாழ்வதுண்டு. நரிகள் பெரும்பாலும் சுமார் 9 கிலோ.கி எடை இருக்கும். கருவில் வளரும் நாட்கள் 60-63 நாட்கள். ஆனால் ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் வாழும் பெருஞ்செவி நரிகளின் குட்டிகள் கருவில் வளரும் நாட்கள் சுமார் 50 நாட்கள் ஆகும். [1]

நாய்ப்பேரினத்தின் மற்ற வகைகளான நாய், ஓநாய் போன்றவற்றைவிட அளவில் மிகச் சிறியது.

மேற்கோள்

  1. Macdonald, David (Ed) All the World's Animals - Carnivore, Torstar Books Inc., New York, 1985.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.