அரச மரம்

அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு மரமாகும். அரசு, ஆல், அத்தி போன்றவை தொடர்புடைய மரங்கள் ஆகும். இம்மரம் பாலைக் கொண்டுள்ளது.மிகுதியான ஆக்ஸிஜனை வெளியிடும். 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இம்மரம் இந்து பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரம் இதுவேயாகும் (சமஸ்கிருதத்தில்-போதி). இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது.[1] இந்திய அரசால் வழங்கப்படும் பொதுப் பட்டங்களில் மிக உயர்ந்த பட்டமான பாரத ரத்னா பட்டம் அரச இலையைக் கொண்டுள்ளது.

அரசு
அரச மரத்தின் கிளையும் இலையும்
இலையின் தனித்துவமான வடிவத்தைக் கவனிக்கவும்.
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: ரோசாலெஸ்
குடும்பம்: மோராசேயே
பேரினம்: பைக்கஸ் (Ficus)
துணைப்பேரினம்: Urostigma
இனம்: பை. ரிலிஜியோசா
இருசொற் பெயரீடு
பைக்கஸ் ரிலிஜியோசா
(Ficus religiosa)

L.
பாரத ரத்னா பட்டம்

படக் காட்சியகம்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

  1. http://www.shaivam.org/sv/sv_arasu.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.