கொடுக்காய்ப்புளி

கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி, அவரை போன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும், கிணற்று மேட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றன.

கொடுக்காய்ப்புளி
கொடுக்காய்ப்புளி(கோணக்காய்)

Secure  (NatureServe)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசித்கள்
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
பேரினம்: Pithecellobium
இனம்: P. dulce
இருசொற் பெயரீடு
Pithecellobium dulce
(Roxb.) Benth.[2]

இதன் காய்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்வதைப் பார்க்கலாம். இது, கோணப் புளியங்காய், கோணக்காய், சீனிப்புளியங்காய்,கொரிக்கலிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.பழந்தமிழர்களால் மருந்தாக பயன்பட்ட இதனை உக்காமரம் என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் இலைகள் ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்கப்படுகிறது[3].

உசாத்துணை

  1. "Pithecellobium dulce – (Roxb.) Benth. Guama Americano". NatureServe Explorer. NatureServe. பார்த்த நாள் 2010-09-19.
  2. "Taxon: Pithecellobium dulce (Roxb.) Benth.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (1994-08-23). பார்த்த நாள் 2010-03-29.
  3. "வெள்ளாடு வளர்க்க "டிப்ஸ்'". தினமலர். 28 மார்ச் 2015. http://www.dinamalar.com/news_detail.asp?id=1217051&Print=1. பார்த்த நாள்: 5 மார்ச் 2016.

இதனையும் காண்க


வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.