பேரி

பேரி எனப்படுவது ஒரு தாவரப் பேரினத்தையும் அத்தாவரத்தின் உண்ணத்தக்க பழத்தையும் குறிக்கும். சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இந்தோனேசியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது. இந்தப் பழம் ஒவ்வாமைத்தன்மை மிகக் குறைந்த, விட்டமின், நார்ப் பொருள் மிக்க உணவாகும்.

பேரி
European Pear branch with fruit
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: ரோசாலெசு
குடும்பம்: ரோசாசியீ
துணைக்குடும்பம்: மலோவைடியீ
சிற்றினம்: மாலியீ
பேரினம்: பைரசு
லி.
இனங்கள்

ஏறத்தாழ 30 இனங்கள்; கட்டுரையில் பார்க்கவும்.

வரலாறு

குளிரான மிதவெப்பத் தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பேரி மரம் மிகப் பழைய காலம் தொட்டே பயிரிடப்பட்டு வருகின்றது. இதன் பழம் உணவாகப் பயன்பட்டதற்கான சான்றுகளும் வரலாற்றுக்கு முந்திய காலம் முதலிருந்தே கிடைக்கின்றன. சுவிசு ஏரிக் குடியிருப்புக்களில் இதன் தடயங்கள் கிடைத்துள்ளன. இதைக் குறிக்கும் "பியர்" என்னும் சொல் அல்லது அதையொத்த சொற்கள் எல்லா செல்டிய மொழிகளிலும் காணப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.