காரை

காரை என்பது, (தாவர வகைப்பாடு : Canthium parviflorum) தமிழகத்தின் பழத்தாவரங்களில் ஒன்றாகும். இது காரச்செடி என்றும் அழைக்கப்படும் இதன் காய்கள் காரக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு முள்செடியாகும். தமிழகமெங்கும் காணப்படுகின்றது. இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இதன் இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த குத்துச் செடியாகும். இதன் காய்கள் பச்சை நிறத்தில் காணப்படும். பிறகு மஞ்சள் நிறமாக முதிர்ந்து மங்கலான மஞ்சள் நிறப் பழமாகும். இதன் காய்கள், பழங்கள் உண்ணக்கூடியவை. இதன் இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இத்தாவரம் தொண்டை நாட்டில் காஞ்சி நகருக்கு அருகில் உள்ள திருக்கச்சி நெறிக் காரைக்காடு என்னும் கோயிலில் தலமரமாக உள்ளது.[1][2]

காரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: Magnoliophyta
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Gentianales
குடும்பம்: Rubiaceae
துணைக்குடும்பம்: Ixoroideae
சிற்றினம்: Vanguerieae
பேரினம்: Canthium
இனம்: Canthium coromandelicum

மேற்கோள்

  1. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.58
  2. http://www.shaivam.org/sv/sv_kaarai.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.