கிளா (தாவரம்)

கிளா அல்லது கிலாக்காய் இது கொச்சை வழக்கு. இதனை களா என்றே மருத்துவ நூல்கள் கூறுகின்றன (Carissa carandas) இத்தாவரம் வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு தாவரம். மெல்லிய கம்பி போன்று தரையில் படரும். இலைகள் சிறிய முட்டை வடிவில் காணப்படும். இலைகளுக்கு அடியில் சிறியமுட்கள் இருக்கும். இதன் பழங்களில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

கிளா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: Apocynaceae
பேரினம்: Carissa
இனம்: C. carandas
இருசொற் பெயரீடு
Carissa carandas
L
வேறு பெயர்கள்
  • Arduina carandas (L.) Baill.
  • Arduina carandas (L.) K. Schum.
  • Capparis carandas (L.) Burm.f.
  • Carissa salicina Lam.
  • Echites spinosus Burm.f.
  • Jasminonerium carandas (L.) Kuntze
  • Jasminonerium salicinum (Lam.) Kuntze

பூக்கள் கொத்து கொத்தாக வெண்மை நிறத்தில் காணப்படும். காய்கள் பச்சையும் லேசான சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்து கொத்தாகவும் புளிப்புச் சுவையுடனும் இருக்கும். பழங்கள் கருமை நிறமாகவும் இனிப்பாகவும் இருக்கும். காய்களை ஊறுகாய் போட்டு உண்ணலாம்.

மேற்கோள்கள்

1. தமிழ்நாட்டுத் தாவரங்கள் பாகம் இரண்டு கே.கே. ராமமூர்த்தி தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் பதிப்பு 2000

2. குணபாடம் முதல் பாகம் க.ச. முருகேச முதலியார் இந்திய மருத்துவம் - ஓமியோபதித்துறை சென்னை 600 106

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.