ஆல்

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

ஆல்
ஆலமரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: Urticales
குடும்பம்: மொராசியே
பேரினம்: ஆலினம்
துணைப்பேரினம்: உரோஸ்டிக்மா
இனங்கள்

பல

பெயர்

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.[1] அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[2]

பயன்

  • ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
  • நல்ல நிழல் தரும். [3]
  • இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
  • ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
  • பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
  • இது நல்ல நிழல் தருகிறது

சிறப்பு

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி
  • சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.[4]
  • திருவாலங்காடு என்னும் ஊர் இம்மரத்தால் சிறப்புப் பெற்றுள்ளது
  • 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க' என வாழ்த்துவர்.
  • இன்றும் பல ஊர்களில் கிராமக் கூட்டங்கள் ஆலமரத்தடியில் நடைபெறுகின்றன.[5]
  • திருஅன்பிலாலந்துறை, பழுவூர், திருவாலம்பொழில் முதலிய சிவத்தலங்களில் ஆலமரம் தலமரமாக விளங்குகின்றது.[6]

இந்திய தேசிய மரம்

இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது.[7]


சொல்லின் வேர்

அல் மற்றும் அலை என்பதற்கு அலைதல் , விரித்தல் என்று பொருள். ஆலமரம் அலைந்து விரிந்து வளரும் மரம் என்பதால் "ஆல் "என்று பொருள். அதே போல ஆலை  என்பதற்கு  அலைந்த விரிந்த இடம் என்றும் பொருளுண்டு.

பழமையான ஆலமரம்

சென்னை அடையாற்றில் 450 வயதை கடந்த பழமையான ஆலமரம் பாதுகாக்கபட்டு வருகின்றது. [8][9]

படத்தொகுப்பு

அடிக்குறிப்பு

  1. அகல் > ஆல்
    பகு < பகல் > பால்
    துகள் > தூள்
    விழுது > வீழ்
  2. மரத்தின் உறுப்புகளில் ஒன்று வீழ் - தொல்காப்பியம் மரபியல் 90
    ஐது வீழ் இகுபெயல் (மழை விழுதல்) - சிறுபாணாற்றுப்படை 8
  3. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
    தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
    நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
    அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
    மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே - வெற்றிவேற்கை
  4. ஆலமர் செல்வன் அணிசல் பெருவிறல் கலித்தொகை - 81
  5. http://www.indg.in/primary-education/childrenscorner/national-symbols/ba4bc7b9abbfbaf-baebb0baebcd
  6. http://www.shaivam.org/sv/sv_aal.htm
  7. http://knowindia.gov.in/knowindia/national_symbols.php?id=5
  8. http://www.thehindu.com/news/cities/chennai/survivors-of-time-long-before-chennai-there-stood-a-tree/article2141956.ece
  9. சென்னை அடையாறு ஆலமரம் 450 வயதை கடந்தது மாலைமலர் செப்டம்பர் 17 2013

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.