வெள்வேல்

வெள்வேல் (Vachellia leucophloea) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை உடைய கரிய முள்ளுள்ள பெருமரம். மரத்தின் புறப்பரப்பு வெண்ணிறமாகவும், உட்புறம் மஞ்சளாகவும் இருக்கும். மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் தட்டையானவை. காடுகளிலும், தரிசுநிலங்களிலும் தமிழகத்தில் எங்கும் தானே வளர்கிறது. இதன் இலை, பட்டை, வேர், பிசின் விதை ஆகியவை மருத்துவப்பயன் உள்ளவை. [1] திருவேற்காடு என்னும் தலத்தில் தல விருட்சமாக விளங்குவது வெள்வேல் மரமாகும். தலத்தின் பெயர் வேல்காடு என மரத்தின் பெயராலேயே அமைந்துள்ளது.[2]

வெள்வேல்
ஐதராபாத், வனஸ்தாலிபுரத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Vachellia
இனம்: V. leucophloea
இருசொற் பெயரீடு
Vachellia leucophloea
(Roxb.) Maslin, Seigler & Ebinger
varieties
  • Vachellia leucophloea var. leucophloea (Roxb.) Maslin, Seigler & Ebinger
  • Vachellia leucophloea var. microcephala (Kurz) Maslin, Seigler & Ebinger
வேறு பெயர்கள்
  • Acacia leucophloea (Roxb.) Willd.
  • Mimosa leucophloea Roxb.
  • Kuteera-gum

மேற்கோள்

  1. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.81
  2. http://www.shaivam.org/sv/sv_velam.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.